பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


நடந்த விதிக் கூத்தை என் அன்னத்துக்கிட்டே விளக்கிச் சொன்னால், அவ எம்மனசைக் கட்டாயம் புரிஞ்சுக்கிடவே செய்வா, ஆனா அவகிட்டே விட்ட சாவலிலே தோத்துப் போனதுக்குப் பொறகு, அந்தத் தெய்வத்தை அற்பனான நான் எந்த முகத்தைக் கொண்டு காண வாய்க்குமாம் ? பாவம். அன்னக்கிளி எங்கிட்டேயிருந்து நல்ல தகவலை எதிர்பார்த்து ஏங்கிக் கிட்டு இருக்கும் ஐயையோ, தெய் வமே! - என் தெய்வம் நான் இல்லாங்காட்டி, இந்த மண்ணிலே ஒரு இம்மிப் பொழுதுக்குக் கூட உயிர் தரிக்க

மாட்டாதே!

ஆத்தாளே மூத்தவளே எம்புட்டுப் பொஞ்சாதிப் பொண்ணு எங்கண்ணுக்குப் புலப்படாததாட்டமே, நீயும் எங்கிட்டோ ஏனோ கண் மறைவா இருக்கியே ? இனிமே நான் எந்தக் கோயில் மண்ணிலே விழுந்து புரண்டு அழு வேன்? ஐயையோ, மகமாயித் தாயே! என்னாலே ஒனக் கும் பழி ஏற்பட்டுப் போயிடுச்சே ? நான் பாவி மகாபாவி

இனியும் இந்தப் பாவியைப் பூமித்தாய் தாங்கவே மா ட் டா, தாங்கவும் கூடாது புள்ளே அன்னக்கிளியோ ! எம்புட்டு அன்னக்கிளிப்புள்ளே !’

ஆந்தைகள் இணை சேர்ந்து, பிணை சேர்த்துச் சர சம் 呜母6可·

நிலவின் களங்கத்திற்குப் பொறுப்பு அந்த மேகம் தான்!

மகமாயி!. முத்துலிங்கத்திற்குக் கத்திக் கதறவோ, இல்லை, அழுது புலம்பவோ இனி நெஞ்சிலே வலுவே இல்லை, வல்லமையும் இல்லை. -

சோதித்த இருட்டு இன்னமும் சோதிக்க வேண்டுமா ? ‘நல்ல பூமி'யின் அமைதி அழகுடன் ஆட்சி நடத்துகிறது. சுயப் பிரச்சினையை மீட்டுக் கொண்டான் அவன்.