பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ii)

ஆடி அடங்கும் இந்த மணவாழ்க்கையின் கதை சாமான்யப்பட்டதா ? என்ன ?

ஆடி அடங்காத இந்தக் கதை வாழ்க்கையும் அற்ப சொற்பமானதல்லவே ?...

இந்நிலையிலேதான், வாழ்க்கையும் கதையும் பின்னப் பிணைந்து அழகு காட்டவும், அழகு கூட்டவும் தலைப்படு கின்றன.

எண்ணிப் பார்க்கிறேன்; எண்ணங்களிலே, மீண்டும் இவ்வுண்மைகள் புதிய புலரியின் பொன்விடியலாகப் பளிச் சிடுகின்றன :

பெண் ஒரு புதிரல்லள்; அவள் ஒரு புதுமை! தெய்வம் ஒரு புதுமையல்ல; அது ஒரு புதிர்! குழந்தை ஒரு கனவல்ல; அது ஒரு வாழ்கை ! அன்பு ஒரு சோதனை அன்று; அது ஒரு உண்மை! சத்தியம் ஒர் ஆணை அல்ல; அது ஒரு தர்மம்! இலட்சியம் ஓர் எல்லையல்ல; அது ஒர் ஆன்மா ! காதல் ஒரு விளையாட்டு அன்று; அது ஒரு தவம்! வாழ்க்கை ஒரு பிரச்சனை அல்ல; அது ஒரு சாதனை!