பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

“ஆமாம்!

“அப்படியானால், இவங்களையும் குற்றப் பரம்பரை லிஸ்டில் சேர்க்க வேண்டியதுதான் என்று சொல்லுங்க' என்று ஒரு போடு போட்டான் பூமிநாதன்.

இதற்குப் பதில் எதுவும் சொல்லாமல், பூமிநாதனின் அபிப்பிராயத்தை ஏற்பவன் போன்று, விநயமாகச் சிரித்து வைத்தான் அம்பலத்தரசன். அவன் பூமிநாதனைத் தலை உயர்த்திப் பார்த்தபோது, பூமிநாதனின் முகம் இருந்தி ருந்தாற்போல சிந்தனையின் பிடியில் சிக்கியிருக்கக் கண் டான்.

“என்ன மிஸ்டர் பூமிநாதன்! பலத்த சிந்தனையில் அமிழ்ந்திட்டீங்க?" என்று கேட்டான்.

சிந்தனையின் கலவரம் மாறினாலும், அவனது கண் களின் கலக்கம் மாறவில்லை என்பதை அம்பலத்தரசனால் கணிக்கக் கூடாமல் இல்லை.

மறந்து விட்டேனே! மிஸ் ஊர்வசியின் நடிப்பு எப்படி இருந்துச்கங்க, ஸார்?"

“பாவம், பரிதாபத்துக்குரிய பெண் அவள்!"என்றான் அம்பலத்தரசன்.

பூமிநாதன் ஏதோ பதட்டம் அடைந்தான். பதட்டத் தின் சூடு மாறாமல், அம்பலத்தரசனை ஊடுருவி நோக்கினான்.

“நீங்க என்ன சொல்றிங்க?" என்று கேள்வியைச் சொடுக்கினான் அவன். டெர்லின் சட்டையின் வெள்ளை நிறம் குழல் விளக்கில் மேலும் மின்னியது.

அம்பலத்தரசனுக்கு அப்பொழுதான் தன் நா தடுமாறி விட்ட தவறு புரிந்தது. தவற்றை உணர்ந்த சிந்தையோடு, “ஆமாங்க! நாடகத்திலே ஊர்வசியின் நிலை அப்படித்