பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


தான் வந்து சில வினாடிகள் தாம் ஆகியிருக்குமென்று மறுமொழி உதிர்த்தான் அவன். சொல்லிவிட்டு அவன் அவளைப் பார்த்த போது, சரிந்து விழுந்த மாரகச் சேலையை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தாள் அவள். சோலி மினு மினுத்தது. அவன் கண்கள் தாழ்ந்தன. அதே நேரத்தில், அவள் நயனங்களும் கீழே இறங்கி மேலே உயர்ந்தன.

“மிஸ்டர் அம்பலத்தரசன்!"

“சொல்லுங்கள், குமாரி ஊர்வசி!'

"ஐயா, தயவு செஞ்சு என்னை ஊர்வசியென்றே அழைங்க இனி!’

சற்று முன் அழைத்த அழைப்பிலிருந்த சத்து இப் போதைய வேண்டுதலையில் வடிந்திருந்தது. அவன் பெருமூச்சோடு 'ஆகட்டும்’ எனச் சொல்லி, அவளை நன்றாகப் பார்வையிட்டான். அவள் அங்கு வந்தபோது, அவள் முகம் காட்டிய அந்தச் சலனம் இப்போது மறைந்து விட்டிருக்கக் கண்டான் அவன். அந்நிலை அவனுக்கு ஒரளவு ஆறுதலாகவும் இருந்தது. அமைதியையும் ஒாளவுக்கு அக்காட்சி கொடுத்திருக்கவும் கூடுமே!

"நீங்க சாப்பிட்டீங்களா, என்ன?' என்று விசாரித் தாள் ஊர்வசி, பசுங்கிளியின் செங்கனி வாய்ச் சிவப்பு அவளுக்குச் சொந்தமான இதழ்களில் ஒட்டியிருந்தது.

“நான் உங்ககிட்டே கேட்க வேண்டிய கேள்வியை இப்போது நீங்க என்கிட்டே கேட்கிறீங்க' நான் நாடகம் முடிஞ்சு வருறப்பவே பாலும் பழமும் பிராட்வேயில் சாப் பிட்டிட்டேன் உங்களுக்கு இப்போது தேவை எதுவென்று சொல்லுங்க’ என்று கேட்டான்

“எனக்கு இப்போ தேவையானது உங்க அன்பு தான்!'