பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

"அன்புக்கு, ஒரு அடையாளம் வேணுமில்லே" என்றான் அவன்.

"அந்த அன்பை நம்பித்தான் நான் உங்க சந்நி தானத்தைத் தேடி வந்திருக்கேன்! "அவள் நா தழுதிழுத்தது.

“சரி, நேரமாகுது. உங்களுக்கு அசதியும் களைப்பும் மிஞ்சியிருக்கும். இப்போது என் கடமை என்னான்னு சொல்லிடுங்க. ஊர்வசி ...” முடிவுச் சொல் கோரும் பாவனை அப்பேச்சில் இருந்தது.

ஊர்வசி விழிகளை நிமிர்த்தி அவனை ஊடுருவிப் பார்த்தாள். அவன் கண்களில் என்ன மாயத்தைத் தரிசித்தாளோ, அவளுடைய கண்கள் புதிய ஒளிகூட்டித் திகழ்ந்தன. நீலப் பாதரஸ் விளக்கில் அவனுடைய அழகு முகம் மேலும் அழகுடன் விளங்கியது.

‘நான் உங்ககிட்டே அடைக்கலப் பொருளாய் வந்திருக்கேன். இந்த உண்மையை நீங்க உணர்ந்திருக்கிங்க உணர்ந்திருக்கிறதாகவும் உங்க வாயாலே சொல்லவும் சொன்னீங்க. பின்னே, நீங்க என்னை எதிர்க் கேள்வி கேட்கிறீக!அதான் எனக்கு மலைப்பைத் தருதுங்க” என்று தாழ்குரலில் செப்பினான்.

“உங்க பேச்சையும், உங்க நிலைமையையும் என்னாலே புரிஞ்சுக்க முடியாது;உணர்ந்துக்கவும் செய்கிறேன்.ஆனா, உங்க முடிவைக் கொஞ்சம் வெளிப்படையாகவே சொல்லிடுங்க. அது தான் நம் இருவருக்குமே நல்லது! "

"இன்றிரவு நடந்த 'வாழ்வதற்கே'என்ற நாடகத்தில் நான் கற்பழிக்கப்பட்டதாக ஒரு பொய்யான கட்டம் கதைக்கென உருவான சமயத்திலே, நான் எனக்குரிய

இ - 6