பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

முடிவை நானே தேடிக் கொள்ள, கத்தும் கடலை சரணாகதி அடைஞ்சேன். அதுவும் கதைக்கான ஒரு பொய் முடிவு,அது. கதாசிரியர் மன்மதனின் முடிவு!

ஆனால், இப்போது நான் மெய்யாகவே கற்பழிக்கப் பட்டவள். எனக்கு மெய்யாகவே சாவதற்கு வழி தெரியும். ஆனால் சாக விரும்பல்லே! வாழ்வதற்கு ஆசைப்படுறேன். ஆனதாலே வாழத்தான் வழி கேட்கிறேன். உங்ககிட்டே என் தோல்விக்குப் பின்னாலேயும் ஒரு வாழ்க்கை இருக்குது; எனக்கேற்பட்ட களங்கத்துக்கு அப்பாலேயும் ஒரு கதை இருக்குது என்கிறது என்னோட சித்தாந்தம்! வாழவேணும் வாழ்ந்தாக வேணும் என்கிற திடமான வைராக்கியத் தோடே நான் வந்திருக்கேன், உங்க நிழலை நாடி-உங்க அன்பைத் தேடி!

என்னுடைய முதல் நாடகமான 'காதலே, வா'யிலே இப்படித்தான் ஒரு கட்டம் உருவாச்சு. எழுத்தாளர் ஒருவர் - தன்னோட புரட்சிக் கருத்துக்களாலே பிரபல மானவர், எனக்கு - அதாவது நாடகத்திலே வழுக்கி விழுந்தவளாக' வந்த எனக்கு - அன்பு தந்து, நிழல் தந்து என்னைத் தன்னோட இனிய பாதியாகவும் ஆக்கிக் சிட்டார்.

இந்த ஒரு நல்ல முடிவை வரவேற்பதாகவும் இம்மாதிரியான சூழ்நிலை பிரத்யட்ச வாழ்க்கையிலே உருவாகும்போது, நெஞ்சுள்ளவங்க தங்கள் தங்கள் கடமையைச் செய்து காட்ட முன் வரவேணுமென்றும் அந்த நாடகத்துக்குத் தலைமை தாங்கிய நீங்க சொன்னிங்க அந்த ஒரு பேச்சுத்தான் இப்போது என்னை உங்க நிழலுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்குது !”

யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதுபோல அவள் பேசினாள். உணர்ச்சி வசப்பட்டுப் பேசினாள். அவளுக்கு யார் எழுதிக் கொடுப்