பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


தோன்றிச் செழித்ததையும் அவன் நன்கு அறிந்தான். கடந்த சில மணி நேரத்தில் அவன் தனக்குத்தானே பக்கு வப்படுத்திக் கொண்டிருந்த புதுத்தெம்புக்கு அந்தப் புது உறவும் புது உரிமையும் நளினம் மிகுந்ததொரு சூழலை உண்டாக்கிக் கொண்டிருந்ததையும் அவன் நறுவிசாக அறிந் திருந்தான்.

தேடிவந்தாள் ஊர்வசி.

தேடிவந்த தெய்வமா அவள் ?

விட்டகுறை - தொட்டகுறை என்பார்களே. அந்தப் பந்தத்தின் விளைவா அது ?

அதன் விளைவாகத்தான் ஊர்வசி அவனைத் தேடி வந்தாளா ?

ஒரு நினைவு மலர்ந்தது.

ஊர்வசியை அவன் முதல் முதலாகச் சந்தித்தது. பொங்கல் திருநாளில், ஒரு நாடகத்தில்,

பெண்களும் ஆண்களும் ஏழெட்டுப் பேர்கள் பழக்கப் படுத்தப்பட்டார்கள்.

ஊர்வசிதான் அவன் நெஞ்சில் நின்றாள். நினைவில் நின்றாள்.

உலகாளும் மாதாவாக - அன்பின் அருள் பாலிக்கும் தெய்வமாக 'வேஷம்' புனைந்திருந்தாள் ஊர்வசி. கதா நாயகிகளின் தந்தை பூஜை செய்வதற்காக அவள் இவ்வாறு லோகத் தாயாகத் தோன்றினாள். மூன்று 'சீன்' கழித்து இவளே கதைக்கு நாயகி. ஆனால் அந்தத் தெய்வ வடிவம் அவனுள் ஒரு பக்தியுணர்வையே உண்டுபண்ணியது பிறந்த வீட்டுக் குழந்தையின் கள்ளமில்லாத்தனத்தை அவள் முகம் காட்டியது. கயல் விழிகளிலே ஒரு கனிவு. கனி இதழ்களிலே ஒரு பரிவு செழித்த மார்பகத்தில் கச்சை. அவள் பாங்கு சேரச் சிரித்து வணங்கினாள். அந்தச்