பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


பற்ற பெண்மையை-சேம நிதியான கற்பைக் காப்பாற்றிக் கொள்ள அவள் சக்திகொண்ட மட்டும் பாடுபட்டுத்தான் இருப்பாள்! அதற்குச் சந்தேகமேயில்லை ! .. பாவம், விதி ! அவளைச் சோதித்து விட்டது.

அவளைக் குறித்த அனுதாபமே அவனது இதயமாகப் பரிமளித்தது. கண்கள் கலக்கம் கண்டன.

சமுதாயத்தின் கண்களை அவன் அறியானா ?

குறுக்கு மறித்துப் பறந்த சைக்கில் அவன் பேரில் மோதியது. அவனுக்குச் சுய நினைவை ஊட்டத்தான் அப்படி மோதியதோ ? அவன் சுயஞாபகம் பெற்ற உண் மையை அறிந்ததும், சைக்கிள்காரன் 'கடலே கதி’ என்று மீண்டும் பறந்து விட்டான்.

வேஷ்டியைத் தட்டி விட்டவனாக அங்கிருந்து புறப் படத் தயாரானான் அம்பலத்தரசன். பட்டணம் விழித் துக் கொண்டபின், அவன் துரங்கிக்கொண்டு இனிமேலும் அங்கே நின்று கொண்டிருக்க முடியுமா ?

அவன் புறப்பட்டான். புறப்பட்டவனின் முன்னே 'டாட்ஜ்’ எதிர்ப்பட்டது. பூமிநாதன் உள்ளே இருந்தான். கார் ஆடி அசைந்து நிற்க முனைந்தது. "ஸார், ஊர்வசியை ராத்திரியிலே யிருந்து காணலையாம்; அவங்க அம்மா சொன்னாங்க! ... பாவம்!" என்று தெரிவித்தான் பூமிநாதன்.

அவனது குரலின் துயரம் அம்பலத்தரசின் நெஞ் சத்தைத் தொட்டது. "அட பாவமே !’ என்று வருத்தத் தைத் தெரிவித்தான்.

ஒரு ஹோட்டல் பாக்கியில்லே, தேடிப் பார்த்திட்டேன் விவரமும் கிடைக்கலே! அவங்க மதர் என் வீட்டுக்கு போன் செஞ்சாங்க ராத்திரி!" என்று மேலும் விளக்கம் கொடுத்தான் சீமான் பெற்ற செல்வம்.