பக்கம்:இசைத்தமிழ்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. தொல்காப்பியனுர் முத்தமிழுள் இயற்றமிழ் இலக்கணத்தை மட்டும் பிரித்து விளக்கும் முறையில் தொல்காப்பியத்தை இயற்றியருளிஞர். இச்செய்தி 'வடக்கின்கண் வேங்கடமும் தெற்கின்கண் குமரியும் ஆகிய அவ்விரண்டெல்லைக்குள்ளிருந்து தமிழைச் சொல்லும் நல்லாசிரியரது வழக்கும் செய்யுளுமாகிய அவ்விரண்டையும் அடியாகக் கொள்ளுகையினலே, அவர் கூறும் செந்தமிழ் இயல்பாகப்பொருந்திய செந்தமிழ் நாட்டிற்கு இயைந்த வழக்கோடே முன்னையிலக்கணங்கள் இயைந்த படியை முற்றக் கண்டு, அவ்விலக்கணங்களெல் லாம் சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவிஞேர்க்கு அறியலா காமையின், யான் இத்துணை வரையறுத்து உணர்த்துவல்’ என்று அந்நூல்களிற் கிடந்தவாறன்றி அதிகார முறையான் முறைப்படச் செய்தலையெண்ணி அவ்விலக்கணங்களுள் எழுத்தினையுஞ் சொல்லினையும், பொருளினையும் ஆராய்ந்து பத்துவகைக் குற்றமும் தீர்ந்து, முப்பத்திரண்டு வகை உத்தியோடு புணர்ந்த இந்நூலுள்ளே அம்முவகை யிலக்கணமும் மயங்கா முறைமையிற் செய்கின்றமையின் எழுத்திலக்கணத்தை முன்னர்க்காட்டி, ஏனையிலக்கணங்களை யும் தொகுத்துக் கூறினன்’ எனப் பனம்பாரளுர் பாயிரத்திற்கு நச்சிஞர்க்கினியர் கூறும் உரைப்பகுதியால் இனிது விளங்கும். முத்தமிழுள் இயற்றமிழிலக்கணத்தை மட்டும் உணர்த்த எடுத்துக் கொண்ட ஆசிரியர் தொல்காப்பியஞரும் முத்தமிழ்த் திறம்பற்றிய பழைய வழக்கினை ஒரோவிடத்து மேற்கொண்டு தமது நூலினுள்ளும் இசைநூன் முடிபுகள் சிலவற்றை ஆங்காங்கே குறிப்பிட்டுச் செல்கின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/10&oldid=744948" இலிருந்து மீள்விக்கப்பட்டது