பக்கம்:இசைத்தமிழ்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 " பாடல் பயிலும் பணிமொழி தன்பணேத்தோள் கூடல் அவாவாற் குறிப்புணர்த்தும்-ஆடவற்கு ைென்றித் தொடையாழின் மெல்லவே தைவந்தர்ள் இன்றிங் குறிஞ்சி யிசை” என்ற வெண்பாவாகும். "இங்கே குறிஞ்சியிசையைப் பாடுதலாகிய தொழிலினுல்ே இடையாமத்திலே கூடுதற்கு நேர்த்தாள் என்பது அநுமானித்தறியப்படும், குறிஞ்சிக்குச் சிறுபொழுது இடையாடிமென அறிக” என்பது மேற்காட்டிய பாடலின் பழையவுரை. இவ்விசை மரபுக்கு ஏற்பத் திருவாவடுதுறை யாதீனத்தும், தருமபுர ஆதீனத்தும் ஆதீனத் தலைவரவர்கள் மார்கழி மாதத்தில் இடையாமத் திலே நித்திய கரும் அனுட்டானங்களை முடித்துக்கொண்டு பூசை மடத்தில் வழிபாடு செய்யும்போது ஒதுவா மூர்த்திகள் குறிஞ்சிப்பண் ஒதுதலே வழக்கமாகக் கொண்டிருக்கிருர்கள் என்றும், பிற்காலத்தில் ஒதுவதில்லையென்றும் ஆசிரியர் பொன்ளுேதுவாரவர்கள் எழுதியிருப்பது இங்கு நோக்கத் தக்கதாகும். அருட்டுறையிறைவல்ை தடுத்தாட் கொள்ளப்பெற்ற நம்பியாருரர். திருவதிகையை வணங்கச்சென்று திருநாவுக் கரசர் கைத்திருத்தொண்டு புரிந்த அத்தலத்தை மிதிக்க அஞ்சி அந்நகருட்புகாது அதன் அயலேயுள்ள சித்தவட மடத்தில் இரவில் துயில்கொண்டார். அதிகைப்பெருமானே முதுமறையோராக அம்மடத்துள் வந்து சுந்தரருடன் உறங்குவார் போலிருந்து ஆருரர் சென்னியில் திருவடி சூட்டியருளினர். அப்பொழுது, சுந்தரர் தம்மானையறியாத சாதியாருளரே" என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினர் என்பது வரலாறு இப்பதிகம் கொல்லிக் கெளவாணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/101&oldid=744950" இலிருந்து மீள்விக்கப்பட்டது