பக்கம்:இசைத்தமிழ்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 21. புறகீர்மை (நேர்திறம்) இது பாலையாழ்த்திறங்களுள் நேர்திறம் என்பதன் அகநிலையாய்ப் பண்வரிசையில் 21 என்னும் எண் பெற்றது. இப்பண் முன்ருந் திருமுறையில் 18 முதல் 123 வரை யுள்ள பதிகங்களிலும், ஏழா ந்திருமுறையில் 83 முதல் 85 வரையுள்ள பதிகங்களிலும் அமைந்துள்ளது. இது விடியற்காலத்திற் பாடுதற்குரிய பண்ணென்பது முன்னர்க் குறிக்கப்பட்டது. இதனை இக்காலத்தார் பூபாளம்' என வழங்குவர். புறநீர்மைப் பதிகங்களைப் பூபாளத்திலன்றி ரீகண்டி என்ற இராகத்திலும் பாடும் வழக்கம் பிற் காலத்தில் இருந்ததென்பது திருவாவடுதுறையாதீன ஏட்டுச் சுவடியிற்கண்ட குறிப்பிற்ை புலம்ை. 25, பஞ்சமம் பாலேப்பெரும் பண்ணின் உறுப்பு என்னுந் திறத்தின் அகநிலையாய்ப் பண் வரிசையில் 25 என்ற எண் பெற்றது. இப்பண் முன்ருந் திருமுறையில் 56 முதல் 66-வரையுள்ள பதிகங்களிலும், ஏழாந்திருமுறையில் 97 முதல் 100 வரை யுள்ள பதிகங்களிலும் பொருந்தியுள்ளது. "பஞ்சமம் என்னும் இராகமானது, மத்தியமா, பஞ்சமீ என்னும் ஜாதி ராகங்களில் தோன்றிக் காகலி அந்தரங்களோடு கூடிப் பஞ்சம சுரத்தினை முதல், கிழமை, ஆகப்பெற்று வருவது: ஹ்ருஷ்யகா என்ற முர்ச்சனையை யுடையது; காமனை அதி தெய்வமாகப் பெற்றது; முதுவேனிற் பருவத்துக்கு உரியது; நகை உவகை என்னும் சுவைகளை யுடையது; விளைவு' என்னும் நாடகச் சந்தியுள் வருவது' என்பர் சாரங்க தேவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/106&oldid=744955" இலிருந்து மீள்விக்கப்பட்டது