பக்கம்:இசைத்தமிழ்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{}{} காகலி அந்தரங்களோடு கூடியவழி ஹ்ருஷ்யகா என்னும் மூர்ச்சனையானது, இக்காலத்து அரிகாம்போதி மேளத்தை ஒப்பது. இம்மேளத்தில் ஆரோகணத்தில் காந்தார தைவதங்கள் நீங்கிய ரிமபந-நதியமகிரி என்னும் ஒளடவ சம்பூரண உருவம் பஞ்சமப் பண்ணுக்கு உரியது என்று கொள்வர் யாழ் நூலார். பஞ்சமப் பதிகங்களைப் பிற்காலத்தார் ஆகிரி ராகத்திற் பாடுதலே வழக்கமாகக் கொண்டனர். 37. கட்ட பாடை (கைவளம்) குறிஞ்சிப் பெரும்பண்ணின் அகநிலையாய்ப் பண் வரிசையில் 37-என்னும் எண்பெற்றது நட்டபாடை. பழந்தமிழ் நூல்களில் நைவளம் என வழங்கப்பெற்ற பண்ணின் பெயரே வடமொழியில் நாட்யபாஷா என்ருகி மீண்டும் தமிழில் நட்டபாடையெனத் திரிந்து வழங்குகிறது. இப்பண் முதல் திருமுறையில் முதல் 22 வரை யுள்ள பதிகங்களிலும் ஏழா ந் திருமுறையில் 78 முதல் 82 வரையுள்ள பதிகங்களிலும், பதினுெரா ந் திருமுறையில் அம்மையார் அருளிய, "கொங்கை திரங்கி" என்னும் முதற் 1. தமிழர் வழங்கிய நைவளம் என்னும் பண்ணினே வடநாட்டார் கைப்பற்றி, வேசர ஷாடவத்திற்குப் பாஷாங்க ராகமாக்கி, "நாட்யா" எனப் பெயர் புனேந்தார்கள். வேற்று மொழியிலிருந்து எடுத்து, வடமொழி வழக்கிற் சேர்க்கப் பட்டதெனக் குறிப்பதற்காக, இது 'நாட்டிய பாஷா எனவும் வழங்கப்பட்டது. தமிழர் தாம் இழந்த பொருளினே அடை யாளம் கண்டறிய மாட்டாதாராய், 'தமிழ் என்பதைக் குறித்து நின்ற 'பாஷா என்னும் சொல்லேப் பர்டை யாக்கி, தட்ட பாடைப் பெயர் வழங்கி யிடர்ப்படுவாராயினர், இனி, இப்பண்ணின நைவளம் என வழங்குவதே முறை யாகும்’ (யாழ் நூல் - பக்கம்-286

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/107&oldid=744956" இலிருந்து மீள்விக்கப்பட்டது