பக்கம்:இசைத்தமிழ்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}0ji குறிப்புடைய மூத்த திருப்பதிகத்திலும் அமைந்துளது, இதனை வேசரஷாடவத்தின் பாஷாங்கமாகக் கொள்வ சாரங்கதேவர். வேசர ஷாடவம் என்பது, சட்ஜ மத்தியமா என்னும் ஜாதி ராகத்தில் தோன்றி, மத்திம சுரத்தை முதல், முடிவு, கிழமையாகக் கொண்டு, காச லீ அந்தரங்களோடு கூடி மத்திம மாதியான முர்ச்சனையை யுடையதென்பர். மத்திம மாதியான முர்ச்சனை யென்பது, குரல் குரலான செம்பாலையைக் குறிக்கும். இக்காலத்தார் இதனை அரி காம்போதி மேளம் என்பர். இனி வேசரஷாடவத்தின் பாஷாங்கமய், நாட்யா எனப் பெயர்பெற்று நின்ற இராகம், சட்ஜத்தைக் கிரக சுரமாகவும் மத்திமத்தை நியாச சுரமாகவும் பெற்றது. மேலும் இது மத்திமத்தை நிறைந்த சுரமாகப் பெற்றுப் பஞ்சமத்தை விட்டது எனக் கூறப்பட்டிருத்தலால் இதன் உருவம் ரிகிமதிந என்பதாகும் என்றும், எனவே இப்பண் ணுக்குரியதாக இக்காலத்தார் வழங்கும் நாட்டைக்குறிஞ்சி யென்னும் இராகம் இப்பண்ணுக்குப் பொருத்தமானதே யென்றும் கூறுவர் யாழ் நூலாசிரியர். நட்டபாடைப் பதிகங்களை நாட்டைராகத்திலும் பாடும் வழக்கம் உண்டெ னத் தெரிகிறது. 33. அந்தாளிக் குறிஞ்சி குறிஞ்சிப் பெரும் பண்ணில் நைவளம் என்ற திறத்தின் புறநிலையாய்ப் பண் வரிசையில் 38 என்னும் எண் பெற்றது அந்தாளி என்ற பண்ணுகும், இது குறிஞ்சிப் பெரும் பண்ணின் திறங்களுள் ஒன்றென்பது தோன்ற அந்தாளிக் குறிஞ்சி என வழங்கப்பெற்றது. முன்ருந் திருமுறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/108&oldid=744957" இலிருந்து மீள்விக்கப்பட்டது