பக்கம்:இசைத்தமிழ்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளபெடை கூறுமிடத்து, 'அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை டேலும் உளவென மொழிய இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மஞர் புலவர்' (தொல்-நூன்மரபு - 33} எனவரும் நூற்பா, எழுத்துக்களில் உயிர்க்கண்ணும் மெய்க் கண்ணும் மாத்திரை கடந்து மிக்கொலித்தல் இசையொடு பொருந்திய யாழ்நூல் இடத்தன எனப் பிறன்கோட் கூற லென்னும் உத்தியால் எழுத்திற்காவதோர் இசை மரபினைக் குறித்தல் காணலாம். பிறன்கோட் கூறலென்னும் உத்தி வினை விளக்கவந்த பேராசிரியர் "பிறன்கோட் கூறல்தன்னுலே பற்ருகப், பிறநூற்கு வருவதோர் இலக்கணங் கூறுமாறு கூறுதல். அது "அரையளபு குறுகல் மகரம் உடைத்தே இசையிடன் அருகும் தெரியுங் கா8ல’’ 'அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்’ 'பண்ணைத் தோன்றிய எண்ணுன்கு பொருளும் கண்ணிய புறனே நானு ன் கென்ப" என இவை அவ்வந் நூலுள் கொள்ளுமாற்ருல் அமையும் என்றவாருயின” எனத் தொல்காப்பியத்திலிருந்து மூன்று எடுத்துக் காட்டுக்கள் தந்து விளக்கியுள்ளார். ஈண்டு தன்னூல் என்றது ஆசிரியர் தொல்காப்பியனர் முத்தமிழுள் இயற்றமிழுக்கு இலக்கணமாகச் செய்த தொல்காப்பி யத்தை, பிறநூல் என்றது என இசைத்தமிழ், நாடகத் தமிழுக்குரிய இலக்கண நூல்களே. இவற்றுள் அரையளபு குறுகல் மகரமுடைத்தே இசையிட னரு கும் தெரியுங் காலே’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/11&oldid=744959" இலிருந்து மீள்விக்கப்பட்டது