பக்கம்:இசைத்தமிழ்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#33 மகரந்தம் கூறிய தேவகாந்தாரத்துக்கு ஒப்பாகக் கொள்ளுமிடத்து ரிகிமிதிநி என்னும் சுத்த ஷாடவவுருவம் பெறும் எனவும் யாழ் நூலாசிரியர் காரணங்காட்டி விளக்கி យុវើទៅ ជី . 45. பழம் பஞ்சுரம் குறிஞ்சிப் பெரும் பண்ணில் பஞ்சுரம்' என்னுந்திறத் தின் புறநிலையாய்ப் பண்வரிசையில் 46 என்னும் எண் பெற்றது. பழம் பஞ்சுரம் என்ற பண்ணுகும். இது நான் கா ந் திருமுறையில் 14, 15-ஆம் பதிகங்களிலும், ஏழா ந் திருமுறையில் 47 முதல் 53 வரையுள்ள பதிகங்களிலும் அமைந்துள்ளது. இதன் பழைய வுருவம் இதுவென விளங்கவில்லை. பிற்காலத்தார் இப்பண்ணமைந்த பதிகங் களைச் சங்கராபரண ராகத்திற் பாடுதலை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 47. மேகராகக் குறிஞ்சி இது, குறிஞ்சிப் பெரும்பண்ணின் பஞ்சுரம்' என்னு ந் திறத்தின் அருகியலாய்ப் பண் வரிசையில் 47 என்னும் எண் பெற்றது. இதனை நாரத சங்கீத மகரந்தம் கூறும் மேகரஞ்சி' என்னும் இராகமாகக் கொள்ளுமிடத்து மமுதலாகிய முர்ச்சனையில் தைவத நிஷாதங்கள் நீங்கிய உருவம் இதன் உருவாகும். மபதநி சரி.க என்ற நிரலில் உள்ள தநி என்பன, சரிகம ப த நி என்ற நிரலில் க ம ஆகுமாதலின் அரிகாம்போதி மேளத்தில் காந்தாரம் மத்தி மம் நீங்கிய ரிபதிந' என்ற சுத்த ஒளடவ வுருவம் மேகராகக் குறிஞ்சியின் உருவமெனக் கொள்ளலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/110&oldid=744960" இலிருந்து மீள்விக்கப்பட்டது