பக்கம்:இசைத்தமிழ்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 61. குறிஞ்சி குறிஞ்சிப் பெரும்பண்ணின் அரற்று' என்னு ந் திறத் தின் அகநிலையாய்ப் பண் வரிசையில் 81-என்னும் எண் பெற்றது குறிஞ்சி யென்றன்பண். இதுமுதல் திருமுறையில் 75 முதல் 103 வரையுள்ள பதிகங்களிலும் நான்காந் திரு முறையில் 21-ஆம் பதிகத்திலும், ஏழா ந் திருமுறையில் 90 முதல் 94 வரையுள்ள பதிகங்களிலும் பொருந்தியுள்ளது. இதனை நாரத சங்கீத மகரந்தம் கூறும் குரஞ்சி யென்னும் இராகமெனக் கொள்ளுமிடத்து, ம-முதலாகிய செம்பாலே யில் நி' குறைந்ததாகக் கொள்ள வேண்டும் என்றும், மமுதலாகிய நிரலில் "நி குறைவது, ச-முதலாகிய நிரலில் 'ம' குறைவதாகுமா தாலால் 'ரிகிபதிந' என்னும் சுத்த ஷாடவவுருவத்தைக் குறிஞ்சிப்பண்ணுக்கு உரியதாகக் கொள்ளலாம் என்றும் யாழ்நூல் கூறும். குறிஞ்சிப்பண் ண்மைந்த பதிகங்களை மலகிரி' என்ற இராகத்திலும் அரி காம்போதி எதுகுலகாம்போதி என்ற இராகங்களின் கலப் பிலும் பாடுதல் பிற்கால வழக்கமாகும். 62. நட்டராகம் குறிஞ்சிப் பெரும் பண்ணின் அரற்று' என்னுந் திறத்தின் புறநிலையாய்ப் பண்வரிசையில் 62 என்னும் எண் பேற்றது நட்டராகம். இப்பண். இரண்டா ந் திருமுறையில் 97 முதல் 112 வரையுள்ள பதிகங்களிலும், ஏழா ந் திரு திருமுறையில் 17 முதல் 30 வறையுள்ள பதிகங்களிலும் அமைந்துளது. "நர்த என்னும் இராகமானது, மத்யமா, பஞ்சமீ என்னும் ஜாதிராகங்களிலே பிறந்தது; பஞ்ச மத்தைக் கிழமையாகவும் முதலாகவும் கொண்டது; காகலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/112&oldid=744962" இலிருந்து மீள்விக்கப்பட்டது