பக்கம்:இசைத்தமிழ்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 'தைவதீ, மத்தியமா என்னும் ஜாதி ராகங்களிலிருந்து தோன்றித் தைவதத்தை முதல் முடிவு கிழமையாகக் கொண்டு காகலி அந்தரத்தோடு கூடி உத்தராயதா என்னும் முர்ச்சனையையுடையது, டக்க கைசிகம். இது, இளிவரல் அச்சம் என்னும் சுவைகளைப் பெற்றது; மகா காளருக்கும் மன்மதனுக்கும் உவப்பை விளைவிப்பது” என் றும், 'மத்திமத்தை முதலாகவும் கிழமையாகவும் தைவ தத்தை முடிவாகவும் பெற்று நிகசத என்னும் இசைக ளோடு கூடிநின்ற திராவிடி என்னும் இராகம் டக்க கைசிகத்தின் விபாஷா ஆகும்" என்றும் சங்கீத ரத்தளுகரம் 硫-鈕的。 தக்கேசிப்பண் மருதப் பெரும்பண்ணின் அகநிலை யாதலால், அரும்பாலையில் (தீரசங்கராபரணத்தில்) பிறக்க வேண்டுமென்பது இடைக்காலத்து மரபு. காகலி அந்தரங் களோடு கூடிய முர்ச்சனைகளிலே ஷட்ஜாதி மூர்ச்சனையே தீரசங்கராபரணமாகும். ஆதலால் மேலே தந்த குறிப்புக் களுக்குப் பொருந்தும் வண்ணம் தக்கேசியை கி மி தி நி’ என்னும் சுத்த ஒளடுவ ராகமாகக் கொள்வர் யாழ் நூலார். தக்கேசிப் பதிகங்களைப் பிற்காலத்தார் காம்போதியிற் பாடி வருகின்றனர். 70. கொல்லி இது, மருதப் பெரும்பண்ணின் நவிர்' என்னுந் திறத்தின் புறநிலையாய்ப் பண்வரிசையில் 70-என்னும் எண் பெற்றது. இப்பண் முன்ருந் திருமுறையில் 24 முதல் 41 வரையுள்ள பதிகங்களிலும், நான்காந் திரு முறையில் முதற் பதிகத்திலும், ஏழா ந் திருமுறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/115&oldid=744965" இலிருந்து மீள்விக்கப்பட்டது