பக்கம்:இசைத்தமிழ்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 12 அதிதெய்லமாகக் கொண்டது; நகை, மருட்கை, அவலம் என்னும் சுவைகளோடு பொருந்தியது' எனச் சங்கீத ரத்தளுகரம் கூறும். ஹாரினுஸ்வர முர்ச்சனை மேசகல்யாணியாகும். அதன் உருவத்தை 'ரிகிமிபதிநி எனக் கொள்ளலாம். இந்நிரலில் நி, மி என்னும் சுரங்கள் நீங்க எஞ்சி நிற்பது ரிகிபதி. இதுவே காந்தாரபஞ்சமத்தின் உருவம். இக்கால வழக் கிலே இவ்வுருவமுடையது மோகனராகமாகும். எனினும் இடைக்காலத்தார் கரகரப்பிரியா ராகத்தை முதல் மேள மாகக் கொண்டார்கள். ஆதலால் ஷட்ஜம், சதுசுருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சதுசுருதி தைவதம், கைசிகிநிஷாதம், ஷட்ஜம் என எடுத்துப் பின்பு அந்நிரலிலே சாதாரண காந்தாரம் முதல் சாதாரண காந்தாரம் வரையும் இசைக்க மேசகல்யாணி மேளமாகும். இதன்கண் ரிஷப தைவதங்களை நீக்க, காந்தார பஞ்சமத்தின் உருவம் வந்தெய்தும் என்பர் யாழ் நூலார். காந்தார பஞ்சமப் பதிகங்களைக் கேதார கெளளையிற்பாடுதல் பிற்கால வழக்கமாகும். 80. கெளசிகம் மருதப்பெரும் பண்ணின் வஞ்சி என்னுந் திறத்தின் பெருகியலாய்ப் பண்வரிசையில் 80 என்னும் எண் பெற்றது கெளசிகம், மூன்ருந்திருமுறையில் 43 முதல் 55 வரை யுள்ள பதிகங்கள் கெளசிகப் பண்ணுக்கு உரியன. "கைசிகீ என்னும் ஜாதி ராகத்தில் தோற்றி; சட்சத்தினை முதல், கிழமை, முடிவு ஆகக்கொண்டு, அற்ப தைவதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/119&oldid=744969" இலிருந்து மீள்விக்கப்பட்டது