பக்கம்:இசைத்தமிழ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 என்னும் இந் நூற்பாவிற்கு மகரமெய் தனக்குரிய அரை மாத்திரையினும் குறுகி வருதலையுடைத்து; இசைத் தமிழின் கண் தனக்குரிய அரை மாத்திரையினும் பெருகி (மிக்கு) ஒலிப்பதாகும்; அதன் ஒலியளவினை ஆராயுங் காலத்து எனப் பேராசிரியர் பொருள்கொண்டுள்ளார். இதன்கண் அருகும் என்னும் சொல்பெருகும் (நீண் டொலிக்கும்) என்னும் பொருளில் பயின்றுள்ளது. இசையின்கண் மகரமெய் பெருகி ஒலிக்கும் எனப் பேராசிரியர் சுட்டிய இசைத்தமிழ்மரபு இங்கு நோக்கத் தகுவதாகும். மூலாதாரத்திலிருந்து இசையினை எழுப்புமிடத்து மகர மெய்யிஞலே சுருதியைத் தோற்றுவித்துக் குற்றெழுத்தாலும் நெட்டெழுத்தாலும் நாதத்தைத் தொழில் செய்து பாடுதல் தொன்றுதொட்டு வழங்கிவரும் இசைமரபாகும். இவ்வாறு இசைச் சுருதி யினை மூலாதாரத்திலிருந்து தோற்றுவித்து ஆளத்தி (ஆலாபனை) செய்தற்கு மகரமெய் துணையாகப் பயன்படும் திறத்தினை, "மகரத்தி னெற்ருற் சுருதி விரவும் பகருங் குறில்நெடில் பாரித்து - நிகரிலாத் தென்கு தென வென்று பாடுவரேல் ஆளத்தி மன்னுவிச் சொல்லின் வகை’ எனவரும் சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரைமேற் கோள் வெண்பாவில் மகரத்தின் ஒற்ருல் சுருதி விரவும் என்ற தொடரால் நன்குணரலாம். இம்முறை சங்க காலத் திலும் தேவார ஆசிரியர்கள் காலத்திலும் வழக்கிலிருந்த தென்பது, இம்மென விமிரும் என்ற சங்க விலக்கியத் தொடராலும் மும்மென்றிசை முரல் வண்டுகள் (1-11-3) எனவரும் தேவாரத் தொடராலும் இனிது புலனுகும். இத் தொடர்களில் இம்ம் மும்ம் என மகரவொற்றல் சுருதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/12&oldid=744970" இலிருந்து மீள்விக்கப்பட்டது