பக்கம்:இசைத்தமிழ்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 +4 தாரால் நவரோசு என்னும் இராகத்திற் பாடப்பெற்று வருவதனைப் பலரும் அறிவர். 82. ທີ່ ຮruສູ ງ இது, மருதப்பெருபண்ணில் செய்திறம் என்ற திறத் தின் புறநிலையாய்ப் பண்வரிசையில் 82-என்னும் எண் பெற்றது. இப்பண் இரண்டாந்திருமுறையில் 40 முதல் 53 வரையுள்ள பதிகங்களிலும், நாலாந்திருமுறையில் 19, 20-ஆம் பதிகங்களிலும், ஏழாந் திருமுறையில் 86 முதல் 89 வரையுள்ள பதிகங்களிலும் அமைந்துளது. இதன் பழைய இசையுருவம் புலனுகவில்லை. சீகாமரப் பதிகங் களைத் தேவார ஒதுவார்கள் நெடுங்காலமாக நாதநாமக் கிரியையிற் பாடி வருகின்றனர். 98. சாதாரி முல்லைப் பெரும்பண்ணில் முல்லை என்னுந் திறத்தின் புறநிலையாய்ப் பண்வரிசையில் 98-என்னும் எண் பெற்றது சாதாரி என்ற பண்ணுகும். இது, மூன்ருந்திருமுறையில் 67 முதல் 117 வரையுள்ள பதிகங்களிலும், நான்காந்திரு முறையில் 9-ஆம் பதிகத்திலும் அமைந்துள்ளது. "சட்ஜமத்தியமா என்னும் ஜாதி ராகத்தில் தோன்றித் தார சட்ஜத்தை முதல் (கிரகம்) ஆகவும் கிழமை (அம்சம்) ஆகவும், நிஷாத காந்தார சுரங்கள் குறை (அற்பம்) ஆக வும் பெற்று, ஷட்ஜம் முதலாகிய முர்ச்சனையையுடையதாய், வீரம், வெகுளி என்னும் சுவைகளோடு கூடிக், கருப்பம் என்னும் நாடகச் சந்தியுள் வருவது சாதாரிதா என்னும் இராகம்" என்பர் சாரங்கதேவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/121&oldid=744972" இலிருந்து மீள்விக்கப்பட்டது