பக்கம்:இசைத்தமிழ்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 கரகரப்பிரியா மேளம் நிஷாத காந்தாரங்கள் அற்பு மாய் (குறையாய்) வருவதாதலின், சாதாரிதா என்னும் இராகம் கரகரப்பிரியா மேளத்தில் தோன்றியதாதல் வேண்டும். இதன்கண் காந்தார சுரம் மிகவும் அற்பமாய் வருதல் கருதி அதனை நீக்க, இது தேவமனேகரி என்னும் இராகமாகலாம் என்றும், பாட்டுக்கு உருகும் தமிழ்ச் சொக்கநாதர் பாணயத்திரர் பொருட்டுக் கூடலம்பதியிலே விறகாளாகிப் பாடியது சாதாரிப் பண்ணுதலின். அத்தெய்வ இசை தேவமனேகரி எனப் பாராட்டப் பட்டதென்றும் கூறுவர் யாழ்நூலாசிரியர். சாதாரிப் பதிகங்களைப் பந்து வராளியிற் பாடும் பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டதாகும். 3. திவ்வியப் பிரபந்தம் தேவார ஆசிரியர்கள் காலத்தை யொட்டி வாழ்ந்த திருவருட்புலமைச் செல்வர்கள் திருமாலடியார்களாகிய ஆழ்வார்களாவர். ஆழ்வார்கள் அருளிச்செயலாகிய நாலா யிர்த் திவ்வியப் பிரபந்தத்தில் பொய்கையார், பூதத்தார், பேயார் என்னும் முதலாழ்வார் மூவரும் அருளிய திருப் பாடல்கள் இயற்பா வகையைச்சார்ந்தன. பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி என்பனவும், ஆண்டாள் அருளிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்பனவும், குலசேகரப்பெருமாள் அருளிய பெருமாள் திருமொழியும், திருமழிசைப்பிரான் அருளிய திருச்சந்தவிருத்தமும், தொண்டரடிப் பொடியாழ்வார் அரு ளிய திருமாலையும் திருப்பள்ளியெழுச்சியும், திருப்பாளுழ் வார் அருளிய அமலளுதிபிரான்' என்னும் திருப்பதிகமும் திருமங்கை யாழ்வார் அருளிய பெரிய திருமொழி திருக் குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம் என்பனவும், நம் மாழ்வார் அருளிய திருவாய்மொழிப் பதிகங்களும் பண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/122&oldid=744973" இலிருந்து மீள்விக்கப்பட்டது