பக்கம்:இசைத்தமிழ்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#19 மேலேகாட்டிய அட்டவணைகளை நோக்குமிடத்துப் பதின் மூன்று பண்கள் தேவாரத்திற்கும் திருவாய் மொழிக்கும் பொதுவாகவுள்ளன என்பதும், தேவாரத்திற்காணப்படாத ஆறுபண்கள் திருவாய் மொழியில் உள்ளன என்பதும், திருவாய்மொழியிற்காணப்படாத எட்டுப்பண்கள் தேவாரத் திலுள்ளன என்பதும் பெறப்படும். மேற்குறித்த அட்டவணை யிற் பண்ணுக்கு நேராகக் குறிக்கப்பட்ட இராகங்களின் பெயர்கள் ஒருபண்ணுக்கே பலவாகவும் பலபண்களுக்கும் பொதுவாகவும் வரையறையின்றியுள்ளமையை நோக்கு மிடத்து இவை பிற்காலத்தாரால் விரும்பிய வண்ணம் கப்பட்டன வென்பது புலகுைம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/126&oldid=744977" இலிருந்து மீள்விக்கப்பட்டது