பக்கம்:இசைத்தமிழ்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 யினைத் தோற்றுவிக்கும் முறை குறிக்கப்பெற்றிருத்தல் காணலாம். இயற்றமிழ் பற்ருக மகரம் தன் அரைமாத்திரை யிற் குறுகுதலைக் கூறவந்த தொல்காப்பியர், இசைத் தமிழ் பற்ருக மகரம் தன் அரைமாத்திரையிற் பெருகியொலித்த லுண்டு என்பதனையும் இந்நூற்பாவில் உடன் கூறிஞரா தலின் இது பிறன்கோட் கூறல் என்னும் உத்தியாயிற்று. இதுபோன்று அளபிறந்துயிர்த்தலும் ஒற்றிசைநீடலும் என்ற நூற்பாவும் இயல்நூல் பற்ருக இசைநூற்குரிய இலக்க ணங் கூறுதலின் பிறன்கோட்கூறல் என்னும் உத்திக்கு இலக்கியமாயிற்று. இசையில் ஒற்றுக்கள் நீண்டொலித்தல் மெய்யெழுத்துக்களுக்குரிய பொதுவிலக்கணம் எனவும் அவற்றுள் மகரமெய் பெருகியொலித்தல் இசையில் சுருதி யைத்தோற்றுவிக்கும் நிலையில் மகரமெய்யொன்றற்கேயுரிய சிறப்பிலக்கணம் எனவும் இவற்றின் வேறுபாட்டினைத் தெரிந்துணர்க என்பார், 'இசையிடன் அருகும் தெரியுங் காலை என்ருர். 'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புல்னெறி வழக்கம்’ - (அகத்திணை 52) எனப் புனைந்துரை வகையாகிய நாடக வழக்கினுலும் உலக வழக்கிலுைம் புலவரால் பாடுதற்கமைந்த புலனெறி வழக்கமாகிய அகனேந்தினை நெறியினை ஆசிரியர் தொல் காப்பியனர் குறிப்பிடுதலால் அவர் காலத்து நாடகத்தமிழ் பற்றிய நூல்களும் வழங்கியுள்ளமை புலனுகும். தொல்காப்பியனுர்க்குக் காலத்தால் முற்பட்ட அகத் தியஞர் மூன்று தமிழுக்கும் இலக்கணம் செய்தார் என்ப தனைப் பண்டை உரையாசிரியர் பலரும் குறிப்பிட்டுள்ளனர். தென் மதுரைத் தலைச்சங்கத்து இயலிசை நாடகம் என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/13&oldid=744979" இலிருந்து மீள்விக்கப்பட்டது