பக்கம்:இசைத்தமிழ்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#22 ஏழு துளைகளிலும் சரிகமuதநிச என்னும் ஏழெழுத்துக்களும் இவற்றை மாத்திரைப் படுத்தித் தொழில் செய்ய ஏழிசை களும் பிறக்கும் எனவும், இவை பிறந்து இவற்றுள்ளே பண் பிறக்கும் எனவும் விளக்குவர் அடியார்க்கு நல்லார். தேவார ஆசிரியர் காலத்தில் துளைக்கருவிகளுள் வேய்ங்குழல் இசை நாடகத்துறையிற் சிறப்புற்று விளங் கியது. இச் செய்தி, "துக்ள பயிலுங் குழல் யாழ்முரல” (1-4-5) எனவும், 'பாடல் வீணே முடிவம் குழல் பண்ணுகவே ஆடுமாறு வல்லான்” 12-6-1) எனவும், 'சல்லசியி யாழ் முழவமெர்ந்தை குழல் தானமதியம்ப" (3-81-2) எனவும், - "தாளங்கள் கொண்டும் குழல் கொண்டும் யாழ் கொண்டும்’ {4-104-7) எனவும், 'குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை குறட்பூதம் முன்பாடத் தாடுைமே” (8-4-7) எனவும் வரும் திருப்பதிகத் தொடர்களாற் புலனும். வேய்ங்குழலுதுதலிற் சிறந்த பயிற்சியுடையோர் முல்லை நிலமக்களாய ஆயராவர். குழல் வாசிப்பதில் ஆயர்களுக்கு அமைந்திருந்த இசைநலங்குறித்து ஆளுடைய பிள்ளை யார் திருப்பதிகத்திற் காணப்படும் நிகழ்ச்சியொன்று இங்கு நினைக்கத் தகுவதாகும். அன்பினல் நினைப்போர்க்கு வீடு பேறளிக்கும் பெருமை வாய்ந்த திருவண்ணுமலைச் சாரலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/132&oldid=744981" இலிருந்து மீள்விக்கப்பட்டது