பக்கம்:இசைத்தமிழ்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 யென்பேனே' என அடியார்க்கு நல்லார் கூறிய உரை யாலும் நன்கு தெளியப்படும். செங்கோட்டியாழினை அடியொற்றியமைந்தது, வீணை யென்னும் இசைக்கருவியாகும். யாழில் நரம்பு கட்டப் பெறுதற்கு இடமாயுள்ள கோடு என்னும் உறுப்பின் வளே வினைமாற்றி அதன்கண் ஒரு நரம்பிலேயே ஏழிசைகளையுந் தொடுத்து வாசித் தற்கேற்ற வகையில் நரம்புகளின் எண்ணிக்கையைக் குறைத்து அமைக்கப்பெற்ற நரம்புக் கருவியே வீணே என்பதாகும். ஒவ்வொரு சுரத்திற்கும் தனித்தனி நரம்பு கட்டப்பெற்றது பண்டைத் தமிழர் வாசித்த யாழ்க்கருவியாகும். ஒரு நரம்பிலேயே பல சுரங் களே வாசித்தற்கேற்ற தானநிலைகளைக் கொண்டது இக் காலத்து வழங்கும் வீணைக்கருவியாகும். தேவார ஆசிரியர் காலத்தில் பண்டைத் தமிழர் வாசித்த யாழாகிய இசைக் கருவியும் அதனை யடியொற்றியமைக்கப்பெற்று வட நாட்டிற் பெருக வழங்கிய வீணையென்னும் இசைக்கருவியும் தமிழ் மக்களால் திறம்பெற வாசிக்கப் பெற்றன என்பது, தேவாரத்திருப்பதிகங்களில் யாழும், வீணையும் ஆகிய இவ் விருகருவிகளைப்பற்றி யமைந்த குறிப்புக்களால் இனிது விளங்கும். இனி, பழந்தமிழர் கையாண்ட யாழ்க்கருவியும் இக் காலத்தில் நம் நாட்டில் வழங்கும் வீணைக்கருவியும் ஒன்றே யென்பர் சிலர். சங்கத்தொகை நூல்களில் யாழைத் தவிர வீணையென்பதொரு கருவி கூறப்படவில்லை. இளங்கோவடிகள் காலத்தில் வீணையென்றதோர் இசைக் கருவி தமிழ்நாட்டில் வழங்கியதென்பது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/137&oldid=744986" இலிருந்து மீள்விக்கப்பட்டது