பக்கம்:இசைத்தமிழ்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13; புரமாகிய கிரேக்கநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்குக்கொண்டு வரப்பட்டதென எண்ண வேண்டியுளது. பழந்தமிழர் கண்ட யாழ் என்னும் கருவி பன்னு: ருண்டுகளுக்குமுன் மறைந்தொழிந்தது. கடைச்சங்கத் தார் தொகுத்தளித்த பத்துப்பாட்டினுள் பழந்தமிழிசைக் கருவியாகிய யாழுறுப்புணர்த்தும் பகுதிகளை ஒருங்கு நிறுவி அவற்றின் உதவி கொண்டும் அமராவதி கோலி என்னும் இடங்களிற் கண்டெடுக்கப்பட்டுச் சென்னைக் காட்சிச் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் பாடினியுருவங்களில் அமைந்துள்ள யாழ்க்கருவிகளின் சாயலை அடியொற்றியும் பழைய யாழ்க்கருவியின் பல்வேறு வடிவ அமைப்புக்களையும் அவற்றின் உறுப்புக்களையும் அருள்மிகு விபுலாநந்த அடிகளார் தாம் அரிதின் ஆராய்ந்தியற்றிய இசைத்தமிழா ராய்ச்சி நூலாகிய யாழ்நூலில் மறைந்துபோன யாழ்க் கருவியினை மீண்டும் உருவாக்கி வாசித்துப் பயன்கொள்ளும் முறையில் தெளிவாக விளக்கியுள்ளார்கள். இசை வளர்க் கும் நோக்குடன் யாழ் நூல் யாழுறுப்பியலில் யாழின் பல் வேறு உருவச்சாயலும் யாழுறுப்புக்களும் வரைபடங் களுடன் விளக்கப்பெற்றமை காணலாம். பொருநராற்றுப்படை 4-22 அடிகளிலும், பெரும் பாணுற்றுப்படை 1-16 அடிகளிலும், சிறுபாணுற்றுப்படை 221-229 அடிகளிலும், மலைபடுகடாம் 21-37 அடிகளிலும் யாழ்க்கருவியின் அமைப்பும் அதன் பல்வேறு உறுப்புக் களும் வினை பயன் மெய் உரு என்னும் நால்வகை யுவமங்க ளாலும் நன்கு புலப்படுத்தப்பெற்றுள்ளன. பத்தர், கோடு, வறுவாய், போர்வை, யாப்பு, உந்தி, திவவு, கவைக்கடை என்பன யாழின் உறுப்புக்களாகக் குறிக்கப் பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/141&oldid=744991" இலிருந்து மீள்விக்கப்பட்டது