பக்கம்:இசைத்தமிழ்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; 33 தாங்கி நிற்பது உந்தி என்னும் உறுப்பாகும், யாப்பிற் கட்டிய நரம்புகள் இதனூடாக வருதற்கேற்றவண்ணம் இதன் ஒருபகுதி இருபிளவாகப் பிளவுபட்டிருக்கும். உந்தி என்னும் இப்பெயர் உந்து என்னும் வினையடியாகப் பிறந்ததென்பது சென்று வாங்கு உந்தி என்பதல்ை தெளிவாகின்றது, நரம்புகளைக் கோடு என்னும் உறுப்பில் இணைக்கும் நிலையில் அமைந்த வார்க்கட்டு திவவு எனப் படும். இது நரம்பினை வலித்தற்கும் மெலித்தற்கும் பயன் பட்டது மாடகம் எனப் பிற்காலத்தார் பயன்படுத்திய முறுக்காணி பழமை பொருந்திய சீறியாழ் பேரியாழ்களிலே அமைக்கப்பெறவில்லை; திவவு என்னும் உறுப்பே நரம்பினே வலித்தற்கும் மெலித்தற்கும் பயன்பட்டது. கரிய நிற முடைய கோட்டின்மீது கட்டப்பட்ட திவவானது கரிய நிற முடைய பெண்ணின் கையில் அணியப்பட்ட வளையல் போலவும் கருங்குரங்கின் கையினைச் சுற்றிய பாம்பு போல வும் வடிவுபெற்றிருந்தது என்பது பத்துப்பாட்டில் ஆற்றுப் படைப்பாடல்களால் அறியப்படும். சிறிதும் குற்றமின்றிச் செவ்விய நிலையில் அமைந்த மெல்லிய மாட்டு நரம்புகளே முற்காலத்தில் யாழிற் கட்டப்பட்டன. இக்காலத்தில் வீணை முதலியவற்றில் எஃகுத் தந்திகளே இசை நரம்புகளாகக் கட்டப்பெறுவன. நரம்பினுள் மயிர், துரும்பு இருத்தலும் கொடும்புரியாகவோ முறுக்காகவோ இருத்தலும் நரம்பின் குற்றமாகும். யாழ்க்கோடு செய்தற்குரிய மரம் கொன்றை யும் கருங்காலியும் ஆகும். பத்தர் என்னும் உறுப்பு குமிழ், முருக்கு, தணக்கு என்னும் மரங்களாற் செய்யப்படும். இசையொடு பொருந்தாது செவிக்கின்யமில்லாத ஓசை செம்பகை என்னும் குற்றமாகும். அளவிறந்திசைப்பது ஆர்ப்பு என்னும் குற்றமாகும். மழுங்கியிசைத்தல் கூடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/143&oldid=744993" இலிருந்து மீள்விக்கப்பட்டது