பக்கம்:இசைத்தமிழ்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 35 பதின்ைகு நரம்புகள் கட்டப்பெற்றிருந்தன என்பதும் முன்னர் விளக்கப்பெற்றன. ஆளுடையபிள்ளையாரருளிய திருப்பதி கங்களிற் பல திருநீலகண்ட யாழ்ப்பாணரது யாழ்க்கருவியில் வாசிக்கப்பெற்றன என்பது, "விழிம்மிழலேம் மேவிய விகிர்தன்றன விரைசேர் காழிந்நகர்க் கலைஞானசம்பந்தன் தமிழ்பத்தும் யாழின்னிசை வல்லார் சொலக் கேட்டாரவ ரெல்லாம் ஊழின்மலி வினேபோயிட உயர்வானடை வாரே' (1–11–11} எனப் பிள்ளையார் அருளிய திருக்கடைக்காப்புப் பாடலால் நன்கு புலனும், தோற்கருவி இசைப்பாட்டின் தாள அறுதியைப் புலப்படுத்தி இசை வளர்ச்சிக்குத் துணைசெய்வதுடன் கேட்போரது உள்ளத் தைக் கிளர்ந்தெழச் செய்வன தோற்கருவிகளாகும். அவை பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமிருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கண்விடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம். உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை என்னும் முப்பதும் என்பர் அடியார்க்கு நல்லார். இவை அகமுழவு, அகப்புறமுழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமைமுழவு, நாள்முழவு, காலை முழவு என எழுவகைப்படும் என்றும், இவற்றுள் அகமுழவாவன உத்தமமான மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, பேரிகை, படகம், குடமுழா என இவை யென்றும், அகப்புற முழவாவன மத்திமக் கருவியாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/145&oldid=744995" இலிருந்து மீள்விக்கப்பட்டது