பக்கம்:இசைத்தமிழ்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 37 தகுணிச்சம்', தண்ணுமை", பறைச, பிடவம்', முழவு", மொந்தை", முரவம்", எனவரும் தோற்கருவிகள் இசை நிகழ்ச்சிக்கும் ஆடலுக்கும் பயன்படுத்தப் பெற்றனவாகக் குறிக்கப்பெற்றுள்ளன. எனவே இக்கருவிகளிற் பல தேவாரத் திருப்பதிகங்களைப் பாடுங்காலத்தும் பயன்பட்டிருத்தல் கூடும். முதலாம் இராசராசசோழன் தான் எடுப்பித்த தஞ்சை இராசராசேச்சுரத் திருக்கோயிலில் திருப்பதிகம் விண்ணப்பஞ் செய்தற்கு நியமித்த இசைவாணர் ஐம்பதின் மருள், பாடுவாராகிய பிடாரர்கள் நாற்பத்தெண்மரும் இவர் களிலே நிலையாய் உடுக்கை வாசிப்பான் ஒருவனும், கொட்டி மத்தளம் வாசிப்பான் ஒருவனும் இருந்தனர் என அறிகின்ருேம்". இதல்ை திருக்கோயில்களில் இறைவன் திருமுன்னர்த் தேவாரத் திருப்பதிகங்களை விண்ணப்பஞ் செய்யும்பொழுது மத்தளம் முதலிய துணைக்கருவிகளுடன் பாடும் வழக்கம் மிகவும் தொன்மையுடையதென்பது பெறப்படும். கஞ்சக்கருவி இனி, கஞ்சக் கருவிகளாவன வெண்கலத்தால் அமைக்கப்படும் தாளம் முதலாயின. ஆடற்கும் பாடற்கும் தாளின்சதியாக விளங்குதலால் தாளம் என்பது காரணப் பெயர், இசை நாடகங்களுக்கு இன்றியமையாத தாளத் 7-36.9 ,2-94-6 ,13 36-9س3.7 - 111 -4 ,5-57-12.3 14. I-73-6, i-87-8, 2. 57–3, 3-103–6, 6-49-6. وكس6 س4 ,4-38 و 1 س6 س2 ,8 س73 - i ,6-5س. 6 . 2س 10 -6 .15 6-36-8, 6-77-1. 17. 1-44–5, 2-12-3, 3-8-4, 3-35-5, 4-! ! iజ8, 6-10-2, వీ-థీtణ2. 18. 3-3 డ43.

  • தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி, 2 எண் 55.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/147&oldid=744997" இலிருந்து மீள்விக்கப்பட்டது