பக்கம்:இசைத்தமிழ்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இசைநூல்வரன்முறை "இசையாவது நரம்படைவால் உரைக்கப்பட்ட பதி ளுேராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்ருென்ரு கிய ஆதி இசைகள்” எனச் சிலப்பதிகார அரும்பதவுரை யாசிரியர் கூறுவர். மூலாதாரம் தொடங்கிய எழுத்தோசை ஆளத்தியாய்ப் பின் இசையென்றும் பண்ணென்றும் பெய ராம். பல இயற்பாக்களோடு இன்னேசையாகிய நிறத்தை இசைத்தலால் இசையென்று பெயராயிற்று. பாவிளுேடு இயைத்துரைக்கப்பட்ட இசையினை நெஞ்சு, கண்டம், நா. முக்கு, அண்ணம், உதடு, பல், தலை என்னும் எட்டிடங் களிலும் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் எண்வகைத் தொழில் களால் உருவாகப்பண்ணிச் சீர்ப்படுத்திப் பாடப் பெறுவது பண்ணுதலின் பண்ணென்பது காரணப்பெயராம். மிடற்றுப்பாடல், குழல், யாழ் முதலிய இசைக்கருவி களின் ஒலி, அவற்றின் கால அளவினைப் புலப்படுத்தும் தாளம் ஆகிய இவை முன்றும் ஒத்திசைத்து இயங்குவதே இசை என்பர். இன்பத்திலும் துன்பத்திலும் பாட்டுத் தோன்றி உள்ளத்திற்கு ஆறுதலளிக்கின்றது. செய்யுளில் எழுத்துக்கள் பெறும் மாத்திரை அளவு உரைக்கும் இலக் கணம் இயற்றமிழுக்கும் இசைத்தமிழுக்கும் பொதுவாகும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களுக்கும் உரிய செப்பல், அகவல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/15&oldid=745000" இலிருந்து மீள்விக்கப்பட்டது