பக்கம்:இசைத்தமிழ்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 ' யாழின்னிசை வல்லசர் சொலக் கேட்டார வ ரெல்லாம் ஊழின்மலி விண்போயிட உயர் வானடைவாரே' [1-11-11;

  • துன்னிய இன்னிசை யாற்றுதைந்து

சொல்லிய ஞானசம்பந்தன் நல்ல தன்னிசையாற் சொன்ன மாலே பத்தும்’ (1.5-11 " ஒக்க ஞானசம்பந்தன் உரைத்தபாடல்’ (2-97-11) " திருத்தமrந் திகழ்காழி ஞானசம்பந்தன் செப்பிய செத்தமிழ் ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வரர் உயர்ந்தார்களே’ [3-38-11 | எனவருந் தொடர்கள் இக்கருத்தினை வலியுறுத்துவனவாம். ஆளுடைய பிள்ளையாரைப் போன்றே திருநாவுக்கர சரும் இசையோடு கூடிய தமிழ்பாடல்களால் இறைவனை வழிபட்டவர் என்பதும், அப்பெருந்தகையார் உழவாரத் தொண்டாகிய கைத்திருத் தொண்டுடன் தாம் இயற்றிய சொற்றுணே மாலையாகிய திருப்பதிகங்களை இன்னிசையுடன் பாடிப் போற்றும் இசைத் தொண்டிலும் ஈடுபட்டுத் தம்மை ஆட்கொண்ட இறைவரது அருளின் வெளிப்பாடாகிய திருமுறுவலாம் உவகைக் குறிப்பினை நேரிற்கண்டு மகிழ்ந் தார் என்பதும், சேலம்பூவொடு துரிய மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்” [4-1-6] எனவும், 'தொண்டெலாம் இசைபாடத் துாமுறுவல் அருள்செய்யும் ஆரூரரை” [4–5–4] எனவும் வரும் அவருடைய வாய்மொழிகளால் இனி துண ரப்படும். இவ்விரு பெருமக்கள் சென்ற நெறியை அடி யொற்றிப் பின் வந்த நம்பியாருரரும் தமக்கு முன்னுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/150&oldid=745001" இலிருந்து மீள்விக்கப்பட்டது