பக்கம்:இசைத்தமிழ்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4? அப்பெருமக்கள் அருளிய திருப்பதிகங்களை இன்னிசை நலம் பொருந்தப் பாடியும் தாம் இயற்றிய திருப்பதிகங்களை முழவு குழல் முதலிய இசைக்கருவிகளுடன் பொருந்தப் பாடியும் இறைவனை இசையாற் பரவிப் போற்றுதலையே தொழிலாகக் கொண்ட அடியார்கள் விரும்ப இசைத் திருத்தொண்டு புரிந்துள்ளார். இச்செய்தி, "நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கரசரும் பாடிய நற்றமிழ் மாலே சொல்லியவே சொல்லியேத்துகப்பானே' [7-67-3] எனவும், "மந்தம் முழவுங் குழலுமியம்பும் வளர்நாவலர்கோன் நம்பியூரன் சொன்ன சந்தம்மிகு தண்டமிழ் மால்கள் கொண் டடிவீழவல்லார் தடுமாற்றிலரே! I?-4-1 0} எனவும், " கோடரம்பயில் சடையுடைக் கரும்பைக் கோலக்காவு ளெம்மான மெய்ம்மானப் பாடரங்குடி யடியவர் விரும்பப் பயிலு நாவலாரூரன் வன்ருெண்டன் (7.52-19) எனவும், ஏழிசை யின்றமிழால் இசைந்தேத்திய பத்தினையும் ” [7-100–10] எனவும் வரும் ஆருரர் அருளுரைகளால் உய்த்துணரப்படும். தேவாரத் திருப்பதிகங்களை இன்னிசையுடன் பாடி இறைவனைப் போற்றுதல் வேண்டும் என்பதே அத்திருப் பதிகங்களை அருளிச்செய்த பெருமக்களது நோக்கமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/151&oldid=745002" இலிருந்து மீள்விக்கப்பட்டது