பக்கம்:இசைத்தமிழ்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 45 இனிது புலனும், சிலப்பதிகாரத்தில் கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர்குரவை, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை ஆகிய பகுதிகளில் அமைந்த இசைப்பாடல்களாகிய இலக் கியங்களையும் அவற்றுக்கு உரையாசிரியர் வரைந்துள்ள குறிப்புக்களையும், தமிழ் மக்களது நல்வாழ்வினை யுளங் கொண்டு எல்லாம் வல்ல இறைவனைப் போற்று முறையில் அமைந்த தேவாரம் முதலிய சைவத் திருமுறைகள், நாலா யிரத் திவ்வியப் பிரபந்தம், திருப்புகழ் முதலிய தெய்வ இசைப் பாடல்களையும் கருத்திற்கொண்டு பண்டைக் காலத் தில் வழங்கிய இசைப்பாட்டின் யாப்பமைதி பற்றிய இலக் கணங்களைத் தொகுத்து நோக்குவது இன்றியமையாதது. இயற்றமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில் இயற்றமி ழுடன் விரவி வரும் இசைத்தமிழ், நாடகத் தமிழ்க் கூறு களும் பிறநூல்முடிந்தது தானுடம் படுதல் என்னும் உத்தி பற்றி ஆங்காங்கே கூறப் பெற்றுள்ளன. 'அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிட இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனுர் புலவர்” (தொல், நூன்மரபு 33) எனவரும் நூற்பா, உயிரெழுத்துக்களிலும் மெய்யெழுத்துக் களிலும் மாத்திரை கடந்து மிக்கு ஒலித்தல் இசையொடு பொருந்திய யாழ் நூலிடத்தன என எழுத்திற்கு ஆவ தோர் இசை மரபினைக் குறிப்பதாகும். இயற்றமிழுக்கு ஒதிய எழுத்துக்களின் மாத்திரை வரையறையினையும் அவ்வரையறையினைக் கடந்து ஒலித் தல் இசைத் தமிழுக்கு உண்டு என்பதனையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/155&oldid=745006" இலிருந்து மீள்விக்கப்பட்டது