பக்கம்:இசைத்தமிழ்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#48 இசைத் தமிழ் உருக்களின் மூவகைப் பாகுபாட்டினையும், பெரும்பண்ணுகிய சாதி யிசையில் எழுத்தெண்ணி வகுக்கப் பெற்ற கட்டளையடிகள் அக்காலத்து வழங்கிய திறத்தை யும் புலப்படுத்தல் அறியத் தகுவதாகும். உலக வழக்கில் வழங்கும் சொற்ருெடர்களைச் செய் யுளாக அமைக்கும் முறையில் இரண்டசையாலும் மூன்றசை யாலும் ஒரோர் சொற்சீராக இயைந்து முடிவது சீர் என்னும் உறுப்பாகும் என்பார், 'ஈரசை கொண்டும் மூவசை புணர்ந்துஞ் சிரியைந் திற்றது சீரெனப்படுமே” (செய்யுள்-12) என்ருர் தொல்காப்பியர்ை. இயற்றமிழ்ச் செய்யுளின் உறுப்பாகிய சீர் இசைத்தமிழுக்குரிய பாணிபோன்று தாள அறுதி அமைய முடிந்து நிற்றலால் சீர் என்பது தொழிற்பெயராம். இவ்வுண்மை மற்றுச்சீரென்றது என்னை யெனின்-பாணிபோன்று இலயம்பட நிற்றலின் அது சீர் எனத் தொழிற்பெயராம்; என்ன? சொற்சீர்த்திறுதல்' (தொல். செய். 123) என்புழித் தொழிற்படுத்தோதினமை யின் எனவரும் பேராசிரியர் உரை விளக்கத்தால் இனிது புலனுகும். ஆசிரியர் தொல்காப்பியனர் செய்யுளியலின் கண்ணே ஆசிரியம் வஞ்சி வெண்பா கலிப்பா எனப் பாக்கள் நான் கென்றும், அந்நால்வகைச் செய்யுட்களும் அறம் பொருள் இன்பம் என்னும் மும்முதற் பொருள்களையும் உரிப்பொரு ளாகக் கொண்டு பாடப் பெறுவன என்றும் கூறினர். நால்வகைப் பாக்களுள் ஒன்ருகிய கலிப்பாவினை ஒத்தா ழிசைக்கலி, கலிவெண்பாட்டு, கொச்சகம், உறழ்கலி என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/158&oldid=745009" இலிருந்து மீள்விக்கப்பட்டது