பக்கம்:இசைத்தமிழ்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 49 நான்காகப்பகுத்தார் இந்நான்களுள் ஒன்ருகிய ஒத்தா ழிசைக்கலி இருவகைத்தாகும் எனக்கூறி, அவற்றுள் ஒன்றன் இயல்பினே 'இடைநிலைப் பாட்டுத் தரவு போக் கடையென நடைநவின் குெழுகும் ஒன்றென மொழிப” (செய்.132) எனவரும் நூற்பாவில் விரித்துரைத்தார். மேற்கூறிய ஒத்தாழிசைக்கலி இரண்டனுள் ஒன்று, தாழிசையும் தரவும் சுரிதகமும் தனிச்சொல்லும் என நான்குறுப்பாகப் பயின்று வரும் என்பது இதன் பொருளாகும் இந்நூற்பாவின் உரையில் இயற்றமிழ் யாப்புவிகற்பமாகிய ஒத்தாழிசைக் கலியின் உறுப்புக்களாய தரவு, தாழிசை, தனிச்சொல் சுரிதகம் என்பவற்றுக்கும் இசைத்தமிழிலும் நாடகத்தமிழி லும் வழங்கும் முகம், நிலை, கொச்சகம், முரி என்பன வற்றிற்கும் அமைந்த பெயரொற்றுமையினைப் பேராசிரியர் பின்வருமாறு விளக்குவர். 'தரவு என்ற பொருண்மை என்னையெனின், முகத்துத் தரப்படுவது என்ப; அதனை எருத்து எனவுஞ்சொல்லுப 夺玄争母略> இனி இசை நூலாரும் இத் தரவு முதலாயினவற்றை முகம், நிலை, கொச்சகம், முரி என வேண்டுப. கூத்த நூலார் கொச்சகம் உள்வழி அதனை நிலைபெற அடக்கி முகத்திற்படுந்தரவினை மூகம் எனவும், இடைநிற்பனவற்றை இடைநிலை எனவும், இறுதிக்கண் முரிந்து மாறும் சுரிதகத் தினை முரி எனவும் கூறினர்”, என்பது பேராசிரியர் தரும் விளக்கமாகும். இவ்விளக்கத்தினை அடியொற்றி ஒத்தாழி சைக் கலியின் வகையிரண்டினுள் ஒன்ருகிய தேவபாணி யென்னும் இசைப்பாட்டின் இயல்புகளாக அடியார்க்கு நல்லார் கூறும் குறிப்புக்கள் இங்கு நோக்கத்தக்கனவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/159&oldid=745010" இலிருந்து மீள்விக்கப்பட்டது