பக்கம்:இசைத்தமிழ்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#50 'அது (தேவபாணி) முத்தமிழ்க்கும் பொது. அஃது இயற்றமிழில் வருங்கால் கொச்சகவொரு போகாய் வரும். வரும் வழியும் பெருந் தேவபாணி, சிறுதேவபாணி என இருவகைத்தாய் வரும். அங்ங்ணம் வரும் தரவினை நிலை யென அடக்கி முகத்திற்படுந்தரவினை முகநிலை யெனவும் இடைநிற்பனவற்றை இடைநிலையெனவும், இறுதியில் நிற்பனவற்றை முரிநிலையெனவும் பரவுதற் பொருண்மை யாற் பெயர் கொடுத்தார் செய்யுளியலின் கண்ணுமெனக் கொள்க. இனி இசைத் தமிழில் வருங்கால் முகநிலை கொச்சகம் முரி யென்ப ஒருசாராசிரியர்' என்பது அடியார்க்கு நல்லார் தரும் விளக்கம். முற்குறித்த பேராசிரியர் உரையையும் அதனையடி யொற்றி அடியார்க்கு நல்லார் தரும் விளக்கத்தையும் கூர்ந்து நோக்குங்கால், இக்காலத்தில் தென்னுட்டில் வழங்கும் இசைமுறையில் பல்லவி, அநுபல்லவி, சரணம் என்னும் உறுப்புடைய கீர்த்தனம் என்னும் இசைப் பாட லமைப்பு, தொல்காப்பியச் செய்யுளியற் கூறப்படும் ஒத் தாழிசைக் கலியின் அமைப்பினை அடியொற்றியது என்பது நன்கு புலகும். ஒத்தாழிசைக் கலியின் மற்ருெரு வகை, முன்னிலை யிடமாகத் தெய்வத்தைப் பரவும் பொருண்மைத்து என்பது, "ஏனேயொன்றே தேவர்ப்பராஅய முன்னிலேக்கண்ணே’ (செய், :38} என வரும் நூற்பாவாற் புலனும். தெய்வத்தினை முன்னிலை யாகச் சொல்லப் பட்டனவன்றி அல்லன தேவபாணியெனத் தகா என்பர் பேராசிரியர், தேவரைப் பரவிய ஒத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/160&oldid=745012" இலிருந்து மீள்விக்கப்பட்டது