பக்கம்:இசைத்தமிழ்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#53 அவை ஈண்டுக் கூறல் மயங்கக் கூறலாம் (புறத். 27) எனவரும் நச்சிஞர்க்கினியர் உரை, மேற்குறித்த இளம் பூரணர் கருத்தினை மறுக்கும் நிலையில் எழுதப்பெற்றதா யினும், அவ்வுரையிற் குறிக்கப் பெற்ற செந்துறை மார்க் கம், வெண்டுறை மார்க்கம் என்ற குறியீடுகள் தொன்மைக் குறியீடுகளே என்பதும் இசைக்கும் நாடகத்துக்கும் உரிய அவற்றை இயற்றமிழிலக்கணத்துள் இயைத்துக் கூறினர் என்றல் மயங்கக் கூறலாம் என்பதும் நச்சிஞர்க்கினியர் கருத்தெனத் தெரிகிறது. எனினும் மேற்குறித்த நூற்பாவில் செந்துறை வண்ணப்பகுதி எனத் தொல்காப்பியஞர் தெளி வாகக் குறித்திருக்கவும் செந்துறைநிலைஇ வழங்கியல் மருங்கின்வண்ணப்பகுதி வரைவின்று எனத் தாம் வேண்டிய வாறு சொற்கண் மாற்றி நச்சிஞர்க்கினியர் கூறும் பொருள் தொல்காப்பியனர் கருத்துக்கு முரளுகுமென்பது அந்நூற்பாவை மேற்போக்காக நோக்குவார்க்கும் இனிது விளங்கும் செந்துறையாவது, உலகியல் வழக்குப்பற்றி மக்களை இயல்பு வகையாற் புகழும் நிலையில் இசைத்திறம் பொலிய இயற்றப் பெற்ற இசைத் தமிழ்ப்பாடல். வெண்டுறை வாவது, உள்ளதனை உயர்த்துக் கூறும் நோக்கத்துடன் இல்லதனையும் விரவிக் கூறும் புனைந்துரை வகையாகிய நாடகத் தமிழில் இசைநலம் பொருந்த அவிநயத்திற்குரிய எளிய சொற்களால் இயற்றப்பட்ட இசைப்பாடலாகும். எனவே, இசைத் தமிழில் பண்ணுந்திறமும் ஆகியவற்றை விளக்குந் தன்மையனவாய்ச் சிறப்பு முறையில் இசைத் துறைக்கே யுரியவாக இயற்றப்படும் இசைப்பாடல்களும் நாடகத் தமிழில் அவிநயத்திற்கும் முடுகியலாகிய அராகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/163&oldid=745015" இலிருந்து மீள்விக்கப்பட்டது