பக்கம்:இசைத்தமிழ்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 திற்கும் உரியனவாய்ப் பொதுவாக இயற்றப்படும் இசைப் பாடல்களும் என இசைப் பாடல்கள் இருவகைப்படும் என்பதும், இசைக்கே சிறப்புரிமையுடைய இசைப்பாடல் நெறியினைச் செந்துறை மார்க்கம் எனவும், இசைக்கும் நாடகத்திற்கும் பொதுவாக அமைந்த இசைப்பாடல் நெறியின வெண்டுறைமார்க்கம் எனவும் வழங்குதல் தொல்லோர் வழக்கென்பதும் உய்த்துணரப்படும். “கந்திருவமார்க்கத்து வரியும் சிற்றிசையும் பேரிசையும் முதலாயினபோலச் செந்துறைப்பகுதிக்கே உரியவாகி வருவனவும், கூத்தநூலுள் வெண்டுறையும் அராகத்திற்கே யுரியவாகி வருவனவும், ஈண்டுக் கூறிய செய்யுள் போல வேறுபாடப் பெறும் வழக்கியல வென்பது கருத்து. இக் கருத்தானே அவற்றை இப்பொழுதும் இசைப்பா' என வேறுபெயர் கொடுத்து வழங்குப (செய். 153) எனவரும் பேராசிரியர் உரை செந்துறை, வெண்டுறை என்னும் இருவகை இசைப்பாடல்களின் இயல்பினை நுண்ணிதின் விளக்குவதாகும். எண்வகை வனப்பினுள் ஒன்ருகிய புலன் என்பது, இதுவாம் எனக்கூறுமிடத்து, 'சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிய புலனுணர்ந் தோரே (செய்.241) என்னும் நூற்பாவால் விளக்குவர் தொல்காப்பியர். தேர்தல் வேண்டாது பொருள் இனிது விளங்கல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/164&oldid=745016" இலிருந்து மீள்விக்கப்பட்டது