பக்கம்:இசைத்தமிழ்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 என்றது அவிநயத்திற்கு உரியவாதல் நோக்கி என்பது. புலன் என்னும் வனப்புக்கு இலக்கியங்காட்ட வந்த பேரா சிரியர் அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன என விளக்கந் தந்தார். வல்லொற்றடுத்த வல்லெழுத்துப் பயிலாது இரு சீரடி முதலாக எழுசீரடியளவும் வந்த அடி ஐந்தனையும் பெரும்பான்மையும் நாற்சீரடிப் படுத்து நெட்டெழுத்தும் அந்நெட்டெழுத்துப்போல் ஒசையெழும் மெல்லெழுத்தும், லகார, ளகாரங்களுமுடைய சொல்லாற் பொருள் புலப்படச் சென்று நடப்பின் அப்பாடல் இழைபு என்று சொல்லப்படும் வனப்பமைந்தது என்பார் ஒற்றெடு புணர்ந்த வவ்லெழுத் தடக்காது குறளடி முதலா ஐந்தடி யொப்பித் தோங்கிய மொழியான் ஆங்கன மொழுகின் இழையின் இலக்கணம் இயைந்த தாகும். (செய் 242) என்ருர் தொல்காப்பியர்ை. அவையாவன கலியும் பசி பாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறைமார்க்கத் தன என்ருர் பேராசிரியர். இசைத்தமிழுக்குரிய இழைபு என்னும் வனப்பினை நாடகத் தமிழுக்குரிய வெண்டுறை யாகிய புலன் என்னும் வனப்பிற்கு முன் கூறுதல் வேண்டு மன்ருே என வினவுவார்க்கு, இதுகாறும் முத்தமிழுள் முத லாவதாகிய இயற்றமிழிலக்கணம் விரித்துரைக்கப்பட்டது. இனி வருகின்றது இசைத்தமிழிலக்கணமாதலின் அதற்கு உதவியாக இழையினை இறுதிக்கண் வைத்தான் ஆசிரியன்’ என விளக்கந்தருவர் பேராசிரியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/165&oldid=745017" இலிருந்து மீள்விக்கப்பட்டது