பக்கம்:இசைத்தமிழ்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#56 மற்றிதனை வெண்டுறைச் செய்யுட்கு முன் வைப்பி னெனின், இஃது இசைப்பாட்டாகலின், இனி வருகின்றது இசைத்தமிழாகலின் அதற்கு உபகாரப்பட இதனை இறுதிக் கண் வைத்தானென்பது (செய். 242) பேராசிரியர் உரைப்பகுதியாகும். இசையின் பின்னது நாடகமாதலின் பாணன் பின் கூத்தனை வைத்தும், பெண்பாலாகலான் விறல்பட ஆடும் விறலியைக் கூத்தன்பின் வைத்தும், அவ்வினத்துப் பரத்தையரை அதன் பின் வைத்தும் (பாணன் கூத்தன் விறலி பரத்தை என இம்முறையே) கூறினன்’ (செய். 190) எனப் பேராசிரியர் கூறிய விளக்கமும் இங்கு ஒப்பு நோக்கத்தகுவதாகும். ‘கூற்றும் மாற்றமும் இடையிடை மிடைந்தும் போக்கின் ருகல் உறழ்கலிக் கியல் டே” (செய். 156) என்னும் நூற்பாவில் ஒருவர் ஒன்று கூறுவதற்கு மறு மாற்றம் மற்ருெருவர் கூறிச் சென்று சுரிதகம் இன்றி முடிவது உறழ்கலியாகும் என்ருர் ஆசிரியர். இவ்வாறு சுரிதகம் இன்றி வருதல் சிறுபான்மை கொச்சகத்திற்கும் உரியதாதலின் உறழ்கலியைக் கொச்சகத்துள் அடக்குதல் கூடாதோ என வினவெழுப்பிக் கொண்டு, நாடகச் செய் யுட்போல வேறு வேறு துணிபொருளவாகிப் பல தொடர்ந்தமையிற் பெரிதும் வேறுபாடுடைமை நோக்கியும் இது பொருளதிகாரமாதலாற் பொருள் வேறுபாடு பற்றியும், வரலாற்று முறை பற்றியும் வேறு செய்யுளென்ருன் எனப் பேராசிரியர் கூறும் விடை, அவர் காலத்தில் நாடக மாந்தர் பலர் ஒருவருக்கொருவர் உரையாடுந் திறத்தில் கூற்றும் மாற்றமும் ஆக இயற்றப்பட்ட நாடகச் செய்யுள் நூல்களாகிய இலக்கியங்கள் தமிழில் வழங்கின என்பதனை நன்கு புலப்படுத்துதல் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/166&oldid=745018" இலிருந்து மீள்விக்கப்பட்டது