பக்கம்:இசைத்தமிழ்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 வணுயவழி முதற்கூறு புணர்ந்தாற் புணர்ந்தவாற்ருெடு பொருந்தச் செய்யாதவாறு போல என்றவாறு, வாரம் என்பதுகூறு: என்ன? ஒரு பாட்டினைப் பிற்கூறு சொல்லு வாரை, வாரம் பாடுந் தோரிய மகளிரும் (சிலப். 14:155) என்பவாகலின் எனவும், பண்ணும் பாணியும் முதலாயின. ஒப்பினும் வல்லோன் புணர்ந்த இன்னிசையதன் நீர்மைப் படக்காட்டா; வாரம் புணர்ப்பான் புறநீரதாகிய இசைபடப் புணர்த்தல்' எனவும் பேராசிரியர் கூறும் விளக்கம் தொல் காப்பியளுர் காலத்தில் நிலவிய வாரம்பாடும் இசை மரபினை நன்கு வலியுறுத்தல் காணலாம். எழுத்துவடிவம் பெருது நாட்டிற் பொதுமக்களிடையே வழங்கும் எளிய சொல் நடையிலமைந்த இசை நாடகப் பாடல்களைப் பண்ணத்தியென்ற பெயரால் தொல்காப்பிய ஞர் குறித்துள்ளார் என்பது பேராசிரியர் கருத்தாகும். பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் பரிட்டி னியல் பண்ணத்தி யியல் பே, (செய். 160) என்பது பண்ணத்தியின் இலக்கணங்கூறும் நூற்பாவாகும். 'பழம்பாடடினுாடு கலந்தபொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என்றவாறு, மெய்வழக்கல்லாத புறவழக்கினைப் பண்ணத்தி என்ப. இஃது எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தியென்ப வென்பது. அவையாவன: நாடகச் செய்யுளாகிய பாட்டுமடையும் வஞ்சிப் பாட்டும் மோதிரப்பாட்டும் கடகண்டும் முதலாயின. அவற்றை மேலதேபோலப் பாட்டென்னராயினர் நோக்கு முதலாயின உறுப்பின்மையினென்பது அவை வல்லார் வாய்க் கேட்டுணர்க (தொல், செய். 180).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/168&oldid=745020" இலிருந்து மீள்விக்கப்பட்டது