பக்கம்:இசைத்தமிழ்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{5} "கூடை யென்பது கூறுங் காலே, நான்கடியாகி இடையடி மடக்கி நான்கடி யஃகி நடத்தற்கு முரித்தே' எனவும் அரும்பதவுரையாசிரியர் காட்டிய மேற்கோட் சூத்தி ரங்கள் சிறப்புடைய வாரப் பாடலின் இயல்பினையும் கூடைப் பாடலின் இயல்பினையும் விரித்துரைத்தல் காண லாம். இவை அடிவரையறையுள்ள இசைப்பாடல்களாகும். தெய்வத்தைச் சுட்டிய இசைப்பாடலுக்கு, "அழலணங்கு தாமரை யருளாழி யுடைய கோ னடிக் கீழ்ச் சார்ந்து நிழலணங்கு முருகுயிர்த்து நிரந்தலர்ந்து தோடேந்தி நிழற்றும் போலும் நிழலணங்கு முருகுயிர்த்து நிரந்தலர்ந்து தோ டேந்தி நிழற்று மாயின் தொழவணங்கு மன் புடையார் சூழொளியும் வீழ்கரியுஞ் சொல்லாவன் நே’ எனவரும் கூடைச் செய்யுளையும், மக்களைச் சுட்டிய இசைப் பாடலுக்கு, "திங்கள் மாலே வெண் குடையான் சென்னி செங்கோ லது வோச்சிக் கங்கை தன்னேப் புணர்ந்தாலும் புல வாய் வாழிகாவேரி கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற் கண்ணுய் மங்கை மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி, எனச் சோழமன்னனைச் சிறப்பித்துப் போற்றும் முறையில் சிலப்பதிகாரத்தில் வரும் ஆற்றுவரிப் பாடலையும் அரும் பதவுரையாசிரியர் உதாரணமாகக் காட்டியுள்ளார். இவ் வரிப் பாடல்கள் முகமுடைவரி, முகமில்வரி படைப்புவரி என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/171&oldid=745024" இலிருந்து மீள்விக்கப்பட்டது