பக்கம்:இசைத்தமிழ்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#62 மூன்று வகைப்படும். நில முதலிய உலகியற்பொருள்களைக் குறித்த இசைப்பாடல்களுக்கு முகம் எனப்படும் தோற்று வாயாகிய உறுப்பினையுடையதாய் வரும் இசைப்பாடல் முகமுடைவரி எனப்படும். முகமுடைவரியாகிய இசைப்பாட்டு, மூன்றடி முதலாக ஏழடி ஈருக வரும். இதன் இயல்பினை, 'நிலமுத லாகிய உலகியல் வரிக்கு முகமாய் நிற்றலின் முகமெனப் படுமே” "சிந்தும் நெடிலுஞ் சேரினும் வரை யார்’ என அரும்பதவுரையாசிரியர் காட்டும் மேற்கோட் சூத்தி ரங்களால் ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். சிலப்பதி காரம் கானல்வரியில் காவிரியை எதிர்முகமாக்கும் முறை யிற் பாடிய திங்கள் மாலை வெண்குடையான் என்பது முதலாக வரும் மூன்று பாடல்களும் கண்டன கூறிற்ருக யாழின் இட்ட பாடல்களாய் வரிப்பாட்டுக்கு முகமாக நிற்றலின் முகமுடைவரியின் பாற்படும் என்பது அரும் பதவுரையாசிரியர் கருத்தாகும். மேற்குறித்தவாறு எதிர் முகமாக்கும் முகம் என்னும் உறுப்பொழிந்து ஏனையுறுப்புக் களால் வரும் இசைப் பாடல் முகமில்வரி எனப்படும். கானல்வரியில் உள்ள துறைமேய்வலம்புரி' என்ற பாடலும் "நுளேயர் விளரி என்பது முதலாகவுள்ள நான்கு பாடல் களும் முகமில்வரி எனக் குறிக்கப் பெற்றுள்ளமை காண்க. படைப்பு வரி என்பது, எல்லாவறுப்பும் ஒன்ருே பலவோ வெண்பாவாலும் ஆசிரியத்தாலும் கொச்சகம் பெற்றும் பெருதும் வேறுவேருகி வருவது என்பர் அரும்பதவுரை யாசிரியர். இயலிசையாசிரியன் தான் விரும்பிய வண்ணம் வேறுவேருகப் படைத்துக் கொண்ட இசைப் பாடல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/172&oldid=745025" இலிருந்து மீள்விக்கப்பட்டது