பக்கம்:இசைத்தமிழ்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#63 யாவும் மேற்குறித்த படைப்புவரி என்னும் வரிப்பாடலின் பாற்படும் எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். நிலை வரி என்பது தொடக்கவுறுப்பாகிய முகத்திலும் இறுதியுறுப்பாகிய முரியிலும் கூறப்படும் பொருள்கள் தன்கண்வந்து முடியும் பொருள்நிலையினை யுடையதாகும். 'முகமும் முரியுந்தன்னெடு முடியும் நிலேயையுடையது நிலையெனப்படுமே” என்பது சிலப்பதிகாரவுரை மேற்கோள். கயலெழுதி' என்பது முதலிய மூன்று பாடல்களும் நிலவரி. இனி, ஆற்றுவரி என்பது உலகுபுரந்துட்டும் நன் னிர்மை வாய்ந்த ஆறுகளைப் போற்றிப் பரவிய இசைப் பாடல் ஆகும். மருங்குவண்டு சிறந்தார்ப்ப' என்பது முதலாகக் காவிரியைப் பரவிய இசைப்பாடல்கள் ஆற்று வரியின் பாற்படும். பாட்டுடைத் தலைவனுக்குரிய ஊரொடும் பேரொடும் சார்த்திப் பாடப் பெறும் இசைப் பாடல்கள் சாத்துவரி எனப்படும். கானல்வரியிற் புகாரே எம்முர் என முடிகின்ற இசைப் பாடல்கள் ஆறும் சார்த்து வரியின் பாற்படுவன. 'பாட்டுடைத் தலைவன் பதியொடும் பெயரொடும் சார்த்திப்பாடிற் சார்த்தெனப்படுமே” என்பது அரும்பதவுரையாசிரியர் காட்டிய பழஞ்சூத்திரமா கும். இங்குப் பாட்டுடைத்தலைவன் சோழன். சார்த்துவசி முகச்சார்த்து, முரிச்சார்த்து, கொச்சகச்சார்த்து என மூவகைப்படும். அவற்றுள் முகச் சார்த்து என்பது, மூன் றடி முதல் ஆறடியிருக வரும்; இடைப்பட்ட நான்கடியாலும், ஐந்தடியாலும் வரும். முரிச்சார்த்தாவது குற்றெழுத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/173&oldid=745026" இலிருந்து மீள்விக்கப்பட்டது