பக்கம்:இசைத்தமிழ்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.65 இசைப்பாடல்களாகும். கைதைவேலி என்பது முதலிய மூன்று பாடல்களும் மெலிதாகச் சொல்லிக் குறைநயப் பித்தல் என்னுந் துறையில் அமைந்தன. ஆதலால் சாயல்வரி' எனப் பெயர் பெற்றன. சாயல் மென்மை’ என்பது தொல்காப்பியம். வேட்டுவ மகளாகிய சாலினி கொற்றவை கோலம் புனைந்து ஆடிய நிகழ்ச்சியைக் கூறுவது, சிலப்பதிகாரத் திலுள்ள வேட்டுவவரியாகும். இது கூத்தாற் பெற்ற பெயராயினும் கூத்தின்கண் பாடப்பெற்ற இசைப்பாடல் களும் இதன்கண் இடம் பெற்றுள்ளன. கொற்றவை கோயிலின் முன்றிற் சிறப்பு, வள்ளிக்கூத்து, கொற்றவையை முன்னின்று பரவுதல், வென்றிக்கூத்து, வெட்சிமறவர் கொற்றம் பெறும் நிலையில் அமைந்த கொற்றவை கூத்து, மறவர்கள் கொற்றவைக்குப் பரவுக்கடன் கொடுத்தலாகிய அவிப்பலி, பலிக்கொடை ஆகிய பொருள் பற்றிய பல்வேறு தலைப்புக்களில் இருபத்திரண்டு இசைப்பாடல்கள் இதன் கண் இடம் பெற்றுள்ளன, இவை இயற்றமிழ் யாப்பு வகையில் நாற்சீரடிப் பாடல்களாகவும் அறுசீரடிப்பாடல் களாகவும் அமைந்துள்ளன. செம்பொன் வேங்கை சொரிந்தனசேயிதழ் கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கினம் திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே. எனவரும் வேட்டுவ வரிப்பாடல் அப்பரடிகள் அருளிய "அன்னம்பாலிக்குந் தில்லைச்சிற்றம்பலம் என்ருங்கு வரும் திருக்குறுந்தொகை யாப்புக்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/175&oldid=745028" இலிருந்து மீள்விக்கப்பட்டது