பக்கம்:இசைத்தமிழ்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#67 ஆய்ச்சியர் குரவை போலக் குன்றக்குரவை என்பதும் கூத்தாற் பெற்றபெயராகும். மலைவாழ்நராகிய குறமகளின் வென்வேலான் குன்றில் வேங்கை மர நிழலிற் கண்ணகி யார் கணவனுடன் தேவர்போற்ற விண்ணுலகம் புக்க வியப்புடைய நிகழ்ச்சியைக் கண்டு உற்பாத சாந்தியாக மலேயுறை கடவுளாகிய முருகவேளைப் பரவிக் குரவைக் கூத்தாடிய செய்தியைக் கூறுவது குன்றக்குரவையாகும். இதன்கண் சிறைப்புறம், தெய்வம்பராஅயது, அறத்தொடு நிலை முதலிய அகத்திணைத்துறைபற்றிய இசைப்பாடல் களும் பத்தினித் தெய்வமாகிய கண்ணகியின் புகழ்த் திறம் பேசும் இசைப்பாடல்களும் உள்ளன. இவையனைத்தும் இயற்றமிழ் யாப்பு வகையில் நாற்சீரடிகளால் இயன்று மூன்றடி முதல் ஆறடி வரையமைந்தும் நாலடிகளையுடைய தாய் இரண்டாமடி குறைந்து இடைமடக்கியும் வந்த கொச்சக வொருபோகுகளாகும். இனி, சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையில் தேவந்தி, காவற்பெண்டு. அடித் தோழி மூவரும் தம்மைப்பற்றிக் கூறுவனவாகவும் அம்மூவரும் அரற்றுவனவாகவும் அமைந்த பாடல்கள் ஆறும் நாற்சீரடி ஐந்திளுல் இயன்ற கொச்சக வொருபோகுகளாய் அழுகைச் சுவைக்கு இலக்கியமாய் அமைந்த இசைப்பாடல்களாகும். செங்குட்டுவன் கூற்ருக அமைந்த "என்னேயி..தென்னேயி..தென்னேயி..தென்னேகொல்’ எனவரும் நாலடிச் செய்யுளும், கண்ணகியார் செங்குட்டு வனுக்குக் கடவுள் நல்லணிகாட்டும் முறையில் தென்னவன் திேலன் தேவர் கோன் தன்கோயில் நல்விருந்தாயினன் நானவன்றன்மகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/177&oldid=745030" இலிருந்து மீள்விக்கப்பட்டது