பக்கம்:இசைத்தமிழ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# i இரண்டாம் நூற்ருண்டில் வாழ்ந்த இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்திலும் இசைத்தமிழ் பற்றிய அரிய நூன்முடிபுகள் பல பரந்து கிடக்கின்றன. பண்டை நாளிலே இசை வளர்த்த குடும்பத்தார் பாணரென்னும் பெயரினராவர். "துடியன் பாணன் பறையன் கடம்பனென் றிந்நான் கல்லது குடியுமில்லை" என வரும் 335-ஆம் புறப்பாடலால் இப்பாணர் பழந்தமிழ்க்குடிகளென் பது புலகுைம். அன்னேர் வாசித்த யாழ்க்கருவியின் இயல் பும், அவர்தம் வாழ்க்கை முறையும் பழந்தமிழ் நூல்களிலே பேசப்படுகின்றன. இற்றைக்கு 1800 ஆண்டுகளின் முன்பு காவிரிப்பூம் பட்டினத்திலே மருவூர்ப்பாக்கத்திலே பெரும்பாணர்க்கு இருக்கை அமைந்திருந்ததென்பதையும் அக் காலத்து வாழ்ந்த இசையறிஞர் துணைக்கருவி வாசிப்போர், நரம்புக் கருவி இசைப்போர், தோற்கருவி வாசிப்போர், கண் டத்தாற் பாடுவோர் என நால்வகைப் பிரிவினராக அமைந்து இசை வளர்த்தார்களென்பதனையும் சிலப்பதி காரத்தில் இந்திரவிழவூரெடுத்த காதையால் அறிகிருேம். ஆடல் மகள் நாடக அரங்கிற் புகுந்து ஆடும்பொழுது ஆடலாசிரியன், இசையாசிரியன், இயற்றமிழ்வல்ல கவிஞன், மத்தளம் முழக்குவோகிைய தண்ணுமை ஆசிரியன், வேய்ங்குழலுதுவோன், யாழாசிரியன் என்னும் இவர்கள் அவளது ஆடலுக்குத் துணை புரிந்தனர் எனச் சிலப்பதிகார அரங்கேற்று காதையால் அறிகின்ருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/18&oldid=745033" இலிருந்து மீள்விக்கப்பட்டது