பக்கம்:இசைத்தமிழ்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 பாடும் பொழுதே இசைத்திறன் பொருந்தப் பாடப்பெற்ற இன்னிசைப் பாடல்கள் இசைப்பா எனப்படும். ஒன்பதாம் திருமுறையிலுள்ள தெய்வ இசைப்பாடல்கள் திருவிசைப்பா என வழங்கப் பெறுதல் இங்குக் குறிப்பிடத்தகுவதாகும். இயற்புலவராற் பாடப்பெற்று இசைவல்லாரால் இசை யமைத்தற்குப் பொருத்தமான சீர் நலம் வாய்ந்த பாடல் கள் இசையளவுபா என வழங்கப்பெறும். இசை அளவு பா-இசை தழுவிய இயற்றமிழ்ப்பாடல் என்பது இதன் பொருள். இசைநெறியினைக் கந்திருவமார்க்கம் எனக் குறிப்பிடுவர் பேராசிரியர். ஆடல் பாடல் இசையே தமிழே எனவரும் சிலப்பதி காரத் தொடர்க்கு உரை கூறவந்த அரும்பதவுரையாசிரி யர் 'தமிழ் என்பதற்கு வடவெழுத்து ஒரீஇ வந்த எழுத் தாலே கட்டப்பட்ட ஒசைக் கட்டளைக் கூறுபாடுகளும் என விளக்கம் கூறியுள்ளார், இவ்விளக்கத்தைக் கூர்ந்து நோக்குங்கால இசைத்தமிழில் வழங்கும் கட்டளை என்பது இசைப்பாடல்களில் அமைந்த ஒசைக் கூறுபாடாகிய யாப்பமைதியினைக் குறித்த சொல் என்பது நன்கு புலளும், செந்திறத்த தமிழோசை வகையாகிய கட்டளேயமைப் பின அடியொற்றியே இசைப்பாடல்களின் தாளம் முதலிய பண்ணிர்மை அமைதல் இயல்பு. 'வட்டணயுந் தூசியும் மண்டலமும் பண்ணமைய எட்டுடன் ஈரிரண்டாண்டெய்தியபின்-கட்டளைய கீதக் குறிப்பும் அலங்கார முங்கிளரச் சோதித்த ரங்கேற சூழ் சிலப். அடியார்-உரை மேற்கோள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/180&oldid=745034" இலிருந்து மீள்விக்கப்பட்டது