பக்கம்:இசைத்தமிழ்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$71 எனவரும் பரதசேனபதியார் பாடல் இசையுருவங்கன் உள்ளவாறு விளக்கும் முறையில் அமைந்த கீதம் என்னு இசைப்பாடல் வகையினையும் இசையுருவங்களின் அமை: பினை அழகுபெற விரித்து விளக்கும் நிலையில் அமைந்த அலங்காரம் என்னும் இசைப்பாடல் வகையினையும் குறித்தல் காணலாம். எனவே இசைத்திறம் பயில்வோர் இன்றி யமையாது கற்றற்குரிய கீதம் அலங்காரம் என்னும் இசைத் தமிழ்ப்பாடல்கள் எண்ணுருண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்தமை நன்கு புலனுகின்றது இசைப்பாட்டிற்குரிய இலக்கணம் இசைத்தமிழ் இலக் கண நூல்களில் விரித்துரைக்கப் பெற்றுள்ளது. இசை நுணுக்க நூலாசிரியராகிய சிகண்டியார், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, முத்த கம், பெருவண்ணம், ஆற்றுவரி, கானல்வரி விரிமுரண் தலைபோகுமண்டிலம் என இசைப்பா பத்து வகைப்படும் என்பர். பஞ்சமரபு என்னும் இசைநூலினை இயற்றிய அறிவனுள் என்னும் ஆசிரியர், சுத்தம் சாளகம் தமிழ் என்னும் சாதியோசைகள் மூன்ருேடும் கிரியைகளோடும் பொருந்தும் இசைப்பாக்களைச் சிந்து, திரிபதை, சவலை, சமபா தவிருத்தம், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவ பாணி, சிறுதேவபாணி வண்ணம் என ஒன்பது வகையாகப் பகுத்துரைப்பர். மேற்குறித்த இசைப்பாடல் வகைகளுள் செந்துறை என்பது வண்ணப் பகுதியாகிய இசை நுட்பங்கள் விளங்க அமைந்த இன்னிசைப் பாடல் எனவும், வெண்டுறை என் பது நாடகத்தில் அவிநயத்திற்கு ஏற்றவாறு யாவரும் உணரச் சொல்லிலும் இசையிலும் எளிமைத்திறம் பொருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/181&oldid=745035" இலிருந்து மீள்விக்கப்பட்டது