பக்கம்:இசைத்தமிழ்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ł?2 அமைந்த இசைப்பாடல் எனவும் முன்னர் விளக்கப் பெற்றன. தேவபாணி-தெய்வத்தை முன்னிலைப்படுத்துப் பரவும் இசைப்பாடல், நாற்சீரளவுட்பட்ட அடிகளால் இயன்ற இசைப்பாடல் சினுதேவபாணி எனவும், நாற்சீரின் மேலாக எண்சீரளவும் வரும் அடிகளால் இயன்ற இசைப் பாடல் பெருந்தேவபாணி எனவும் வழங்கப் பெறும். ஒரே பாடலிற் பொருள் முற்றி நிற்பது முத்தகம் என்னும் இசைப் பாட்டாகும். பாட்டுடைத் தலைவருக்குரிய பண்புநலன்களை வண்ணித்துப் புகழும் இசைப்பா வண்ணம் எனப்படும். தாம் சொல்லக்கருதிய பொருளைக் கேட்போரது உள்ளம் விரும்பி யேற்றுக் கொள்ளும்படி இன்னேசையுடன் சுவை பெருக நெடிய தொடர்களால் வண்ணித்துப்புகழும் நிலை யில் அமைந்த இசைப்பாடல்களை வண்ணம் என வழங்கு தல் பொருத்தமுடையதே. கேட்போரைத் தம் வசமாக்கும் ஆற்றல் வாய்ந்த வண்ணப்பாடலின் சிறப்பினை, "வண்ணங்கள் தரம்பாடி வந்து நின்று வலிசெய்து வளே கவர்ந்தார்’ )6-9س !{ எனவரும் திருத்தாண்டகத்தில் அப்பரடிகள் அறிவுறுத்தி யுள்ளமை காணலாம். இனி, நாடகத் தமிழில் வழங்கும் சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் என்னும் சொல் வகை நான்கனுள் வண்ணமும் ஒன்ருக வைத்து எண்ணப் படுகின்றது. சுண்ணம்-நான்கடியால் வருவது; சுரிதகம்எட்டடியால் வருவது, வண்ணம்-பதினறடிகளால் வருவது; வரிதகம்-முப்பத்திரண்டடிகளால் வருவது என்பர் அடி யார்க்கு நல்லார். வண்ணம் என்பது, பா அவண்ணம் முதலாக முடுகுவண்ணம் ஈருக இருபது வகைப்படும் எண் தொல்காப்பியர். இசைத்தமிழ் நூலார் வண்ணங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/182&oldid=745036" இலிருந்து மீள்விக்கப்பட்டது